முன்னாள் அமைச்சரை தாக்க முயற்சி: ஒருவர் படுகாயம்- மதுரையில் பரபரப்பு

Home TamilNadu முன்னாள் அமைச்சரை தாக்க முயற்சி: ஒருவர் படுகாயம்- மதுரையில் பரபரப்பு
முன்னாள் அமைச்சரை தாக்க முயற்சி: ஒருவர் படுகாயம்- மதுரையில் பரபரப்பு
Spread the love

உசிலம்பட்டி அருகே முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை தாக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே அத்திபட்டியில் நேற்று மாலை அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.இந்த ஆலோசனை கூட்டத்தை முடித்துவிட்டு திருமங்கலம் நோக்கி சென்ற முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை மங்கல்ரேவு பகுதியில் இடைமறித்த அமமுக நிர்வாகிகள் டி.டி.வி தினகரன் குறித்து அவதூறாக பேசியதாகவும், ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராகவும் கோசங்கள் எழுப்பி ஆர்.பி.உதயகுமாருடன் வந்த கார்களையும் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் உசிலம்பட்டியைச் சேர்ந்த மதுரை மேற்கு மாவட்ட நிர்வாகி தினேஷ்குமார் படுகாயமடைந்த நிலையில், அவருடன் வந்த அபினேஷ், விஷ்ணு என்ற இருவர் சிறு காயமடைந்தனர்.

காயமடைந்தவர்களுக்கு உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பேரையூர் டிஎஸ்பி சித்ரா தேவி தலைமையிலான போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

× Free India Logo
Welcome! Free India