மருத்துவர் மீதான தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்க செயல்- துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 

Home TamilNadu மருத்துவர் மீதான தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்க செயல்- துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 
மருத்துவர் மீதான தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்க செயல்- துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 
Spread the love

தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் மீது அக்கறை கொண்ட அரசு, ஆகையால் மருத்துவர்களுக்கு தேவையான உரிய பாதுகாப்பை வழங்கும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு பன்நோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் பாலாஜி ஜெகநாதன் என்பவர் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இன்று மருத்துவர் பாலாஜியை பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர் கத்தியால் குத்தியுள்ளார். 

விக்னேஷ் தாயாருக்கு ஒரு மாத காலமாக புற்றுநோய் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவர் சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என்ற கோபத்தில் கத்தியால் குத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதைத்தொடர்ந்து மருத்துவர் பாலாஜி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் விக்னேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் விக்னேஷ் பயன்படுத்தியதாக கூறப்படும் கத்தியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மருத்துவருக்கு கழுத்து, காதுக்கு பின்புறம், நெற்றி உள்ளிட்ட 7 இடங்களில் மருத்துவருக்கு கத்திக்குத்தியால் குத்தப்பட்டுள்ளார்.உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது மயக்க நிலையில் உள்ளதாகவும், தற்போது நலமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 8 மணி நேரத்திற்கு பிறகு தான் மருத்துவரின் நிலை குறித்து தெரிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கிண்டி அரசு பன்னோக்கு மருத்துவவமனையில் நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் மருத்துவரின் நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். அப்போது மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும் என உதயநிதி ஸ்டாலினை முற்றுகையிட்டனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,  “மருத்துவர் பாலாஜியை பெங்களத்தூரைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் கத்தியால் தாக்கியுள்ளார்.சம்பவத்தில் ஈடுபட்ட விக்னேஷ் காவல்துறையினரால் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவரை தலைப்பகுதி உட்பட நான்கு இடங்களில் கத்தியால் குத்தியுள்ளார். கழுத்து, காது, தோள்பட்டை ஆகிய பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது. மருத்துவர் மீதான தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்க செயல்.தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் மீது அக்கறை கொண்ட அரசு, ஆகையால் மருத்துவர்களுக்கு தேவையான உரிய பாதுகாப்பை வழங்கும்” என தெரிவித்தார்.


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

× Free India Logo
Welcome! Free India