தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்பிய மக்கள்.. முக்கிய சாலைகளில் அணிவகுத்த நின்ற வாகனங்கள்

Home TamilNadu தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்பிய மக்கள்.. முக்கிய சாலைகளில் அணிவகுத்த நின்ற வாகனங்கள்
தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்பிய மக்கள்.. முக்கிய சாலைகளில் அணிவகுத்த நின்ற வாகனங்கள்
Spread the love

தொடர் விடுமுறை முடிவடைந்த நிலையில், சொந்த ஊருக்கு சென்றவர்கள் சென்னை திரும்பியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஆயுத பூஜை, விஜயதசமி மற்றும் வார விடுமுறையை ஒட்டி பிற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் சென்னையிலிருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றிருந்தனர். விடுமுறை நிறைவடைந்த  நிலையில் நேற்று மாலை முதல ஏராளமானோர்  கார், பேருந்து மூலம் சென்னை நோக்கி  படையெடுத்து வந்த வண்ணம் இருந்தனர்.

இதனால் செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த நிலையில் மதுராந்தகம் அருகே உள்ள ஆத்தூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகனங்கள் கட்டணமின்றி சுங்கச்சாவடியை கடந்து செல்ல அனுமதிக்கப்பட்டது.   

தொடர் வார விடுமுறை நாட்களை கொண்டாடிவிட்டு சென்னை நோக்கி பொதுமக்கள் வரத் தொடங்கியதால் தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசலானது ஏற்பட்டது.

ஜிஎஸ்டி சாலையின் ஓரமாக சரக்கு வாகனங்களை நிறுத்தி வைப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் அதனை தவிர்க்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

× Free India Logo
Welcome! Free India