தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு : பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க அரசு அறிவுறுத்தல்

Home TamilNadu தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு : பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க அரசு அறிவுறுத்தல்
தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு : பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க அரசு அறிவுறுத்தல்
Spread the love

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மழை நீர் பல பகுதிகளில் தேங்கி இருப்பதால், டெங்கு புழுக்கள் உருவாக தொடங்கியுள்ளது. 

இதன் காரணமாக சென்னை, கோவை, தஞ்சை, கடலூர், மதுரை, வேலூரில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சலால் நாள்தோறும் 100 முதல் 120 பேர் வரை பாதிக்கப்படுவதாக தகவல் வெளியாகியது. 

டெங்கு பாதிப்பு அதிகரிக்கும் மாவட்டங்களில் கூடுதல் மருத்துவ முகாம்களை நடத்த பொது சுகாதாரத்துறை ஆணையிட்டது. 3 நாட்களுக்கு மேல் அதீத காய்ச்சல் இருந்தால் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகரித்துள்ளது. 

டெங்கு கொசுக்கள் உருவாகும் வகையில் மழை நீர் தேங்கும் இடங்களை தமிழகம் முழுவதும் உள்ளாட்சி துறை ஊழியர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். காய்ச்சல், மழை கால பருவ நோய்களில் இருந்து மக்களை பாதுகாக்கும் பொருட்டு தமிழகத்தின் பல பகுதிகளில் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மருத்துவமுகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

× Free India Logo
Welcome! Free India