சென்னையில் பார் மீது பெட்ரோல் குண்டு  வீச்சு-வாசலில் படுத்து தூங்கியவரை தட்டி எழுப்பியதால் ஆத்திரம்

Home TamilNadu சென்னையில் பார் மீது பெட்ரோல் குண்டு  வீச்சு-வாசலில் படுத்து தூங்கியவரை தட்டி எழுப்பியதால் ஆத்திரம்
சென்னையில் பார் மீது பெட்ரோல் குண்டு  வீச்சு-வாசலில் படுத்து தூங்கியவரை தட்டி எழுப்பியதால் ஆத்திரம்
Spread the love

சென்னையில் மதுபான பார் வாசலில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தவரை தட்டி எழுப்பியதால் ஆத்திரத்தில் பார் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அரும்பாக்கம் 100 அடி சாலையில் எஸ்.ஆர். பார் என்ற பெயரில் மதுபோன விடுதி செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு இங்கு மது அருந்த வந்த இளைஞர் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு பார் வாசலிலேயை படுத்து தூங்கியுள்ளார்.சிறிது நேரம் கழித்து வெளியே வந்த பார் ஊழியர் வாசலில் படுத்து தூங்கிய இளைஞரை எழுப்பி விரட்டி அனுப்பி வைத்தனர். இதனால் அங்கிருந்து புறப்பட்டு சென்ற இளைஞர் சிறிது நேரம் கழித்து மீண்டும் பாருக்கு வந்து தான் கையில் கொண்டு வந்த பெட்ரோல் குண்டை பார் மீது வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளார். 

பெட்ரோல் குண்டு வெடித்து சிதறி பாரில் இருந்த பொருட்கள் தீப்பிடித்து எரிந்தது. உடனே பார் ஊழியர் தீயை அணைத்ததுடன் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிச் சென்ற இளைஞரை விரட்டி பிடித்து அரும்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.பின்னர் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் திருமுல்லைவாயில் சக்திவேல் நகரை சேர்ந்த விஷ்ணு (30) என்பதும் மதுபோதைக்கு அடிமையான இவர் கடந்த இரு ஆண்டுகளாக போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்ததும் தெரியவந்தது.

மேலும் நேற்று பாரில் மது அருந்தி விட்டு போதையில் படுத்து தூங்கியபோது ஊழியர்கள் விரட்டி அனுப்பியதால் ஆத்திரத்தில் கடைக்கு சென்று பெட்ரோல் வாங்கி மதுபாட்டில் பெட்ரோல் ஊற்றி திரிபோட்டு  பற்ற வைத்து பார் மீது வீசியது தெரிய வந்தது.‌ பின்னர் போலீசார் விஷ்ணு மீது வழக்கு பதிவு அவரை கைது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

  


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

× Free India Logo
Welcome! Free India