கொரோனா தடுப்பூசியால் பாதிப்பா…?- விஞ்ஞானி சௌமியா சாமிநாதன் சொன்ன பரபரப்பு தகவல்

Home TamilNadu கொரோனா தடுப்பூசியால் பாதிப்பா…?- விஞ்ஞானி சௌமியா சாமிநாதன் சொன்ன பரபரப்பு தகவல்
கொரோனா தடுப்பூசியால் பாதிப்பா…?- விஞ்ஞானி சௌமியா சாமிநாதன் சொன்ன பரபரப்பு தகவல்
Spread the love

கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டதால் உடலில் பாதிப்புகள் ஏற்படுவதாக வரும் தகவல்கள் தவறானது. கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு தான் இதய நோய், நீரிழிவு நோய்  ஏற்படுகிறது என உலக சுகாதார நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானி சௌமியா சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

கொரோனா பெருந்தொற்று ஏற்பட்ட நேரத்தில் நாடு முழுவதும் கொரோனாவில் இருந்து மக்களை காக்கும் பொருட்டு அரசு சார்பில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து கொரோனா உயிரிழப்புகள் தடுக்கப்பட்டது. இதைத்தொடந்து கொரோனா தடுப்பூசிகள் செலுத்தியவர்களுக்குக்கு பக்க ஏற்படுவதாகவும், குறிப்பாக இதய நோய், நுரையீரல் பாதிப்பு உள்ளாவர்களுக்கு அதிகளவில் பாதிப்பு ஏற்படுவதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டதால் உடலில் பாதிப்புகள் ஏற்படுவதாக வரும் தகவல்கள் தவறானது.கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு தான்இதய நோய், நீரிழிவு நோய்  ஏற்படுகிறது என உலக சுகாதார நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானி சௌமியா சாமிநாதன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், உலக நுண்ணுயிர் (தீங்கு ஏற்படுத்தும்) எதிர்ப்பு விழிப்புணர்வு வார நிகழ்ச்சியில் எம்எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன தலைவர் சௌமியா சாமிநாதன் மற்றும் தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் உறுப்பினர் செயலாளர் எஸ். வின்சன்ட் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர் பேசிய சௌமியா சாமிநாதன், “கோவிட் காலகட்டத்தில் அதிக அளவில் ஆன்டிபயாட்டிக் மருந்துகளை மக்கள் எடுத்துக் கொண்டனர். இதனால் உடலில் அதிக அளவில் மருந்தின் வீரியம் அதிகரித்துள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் தரவுகளின் படி ஆன்டிபயாட்டிக் மருந்துகளால் 20 லட்சம் பேர் இறந்து போகும் நிலை இருப்பதாக கூறப்படுகிறது.பொதுவாக ஆண்டிபயாட்டிக் மருந்துகள் குறித்து விழிப்புணர்வு தேவை ஏற்பட்டுள்ளது. காய்ச்சல், சளி போன்றவை ஏற்பட்டால் அவை தொற்றாக பரவுகிறது. பாராசிட்டாமல் மாத்திரை, வீட்டில் எடுத்துக் கொள்ளும் இஞ்சி, மிளகு, துளசி போன்றவற்றை எடுத்துகொண்டாலே காய்ச்சல் சளி போன்றவை குறைந்து விடும். 

காய்ச்சல் சளி போன்றவற்றிற்கு ஆண்டிபயாட்டிக் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். பாக்டீரியா தொற்று என மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்ட பின்னர் தான் ஆன்டிபயாட்டிக் மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். மருந்து கடைகளில் கடுமையான விதிகளை பின்பற்ற வேண்டும். மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் ஆன்டிபயாட்டிக் கொடுக்கக் கூடாது. மற்ற நாடுகளில் ஆன்டிபயாட்டிக் மருந்து வழங்குவதில் கடுமையாக விதிமுறைகளை பின்பற்றுவதை போல நம் நாட்டிலும் பின்பற்ற வேண்டும். 

ஒவ்வொரு மருத்துவமனையிலும் ஆன்டிபயாட்டிக் மருந்து வழங்குவதற்காக குழு செயல்படுத்த வேண்டும். கண்காணிப்பு கட்டுப்பாடு போன்றவற்றை மருத்துவக் குழுவினர் மூலமாக கண்காணிக்க வேண்டும். எந்த நோயாளிக்கு இதுபோன்ற ஆன்டிபயாடிக் மருந்துகளை கொடுக்க வேண்டும் என்பதை மருத்துவக் குழுவினர் உறுதி செய்ய வேண்டும்.அவசியமின்றி ஆன்டிபயாட்டிக் பயன்படுத்தக்கூடாது. இதை முறையாக பின்பற்ற வேண்டும். ஆன்டிபயாட்டிக் தரவுகளை வெளிப்படையாக மக்கள் முன் தெரிவிக்க வேண்டும் அப்போதுதான் மக்களுக்கு அது குறித்தான விழிப்புணர்வு ஏற்படும்.

குறிப்பாக தடுப்பூசிகளை பயன்படுத்தும் போது 0.001 சதவீதம் அளவிற்கு பக்க விளைவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. தடுப்பூசி எடுத்துக் கொண்ட 10 லட்சம் பேரில் இரண்டு பேருக்கு பக்க விளைவுகள் அதிகமாக இருக்கலாம். கொரோனா பேரிடர் காலத்தில் அதிக அளவு ஆன்டிபயாட்டிக் மருந்துகளை எடுத்துக் கொண்டதால் கரும்பூஞ்சை நோய் ஏற்பட்டது.கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டதால் உடலில் பாதிப்புகள் ஏற்படுவதாக வரும் தகவல்கள் தவறானது. கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு தான் இதய நோய், நீரிழிவு நோய் போன்றவை ஏற்படுகிறது என விளக்கம் அளித்தார்.


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

× Free India Logo
Welcome! Free India