கூகிள் மேப் பார்த்துப் போய் சதுப்பு நில சேற்றில் சிக்கிய டெலிவரி ஊழியர் 

Home TamilNadu கூகிள் மேப் பார்த்துப் போய் சதுப்பு நில சேற்றில் சிக்கிய டெலிவரி ஊழியர் 
கூகிள் மேப் பார்த்துப் போய் சதுப்பு நில சேற்றில் சிக்கிய டெலிவரி ஊழியர் 
Spread the love

சென்னை சோழிங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த 25 வயதான பவுன்ராஜ் என்ற இளைஞர் தனியார் நிறுவனத்தில் உணவு டெலிவரி செய்யும் வேலை செய்து வந்துள்ளார். இவர் நேற்று இரவு சுமார் 11:20 மணியளவில் துரைப்பாக்கம் விஜிபி அவென்யூவில் உள்ள ஒரு வீட்டிற்கு ஆர்டர் செய்த உணவை டெலிவரி செய்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். 

உணவு டெலிவரி செய்யும் இடத்திற்குச் செல்ல செல்போனில் கூகிள் மேப் பார்த்தபடி சென்றுள்ளார். 
இருள் சூழ்ந்திருந்த பகுதியை மேப் காட்டியதால் கண்மூடித்தனமாக சென்ற பவுன்ராஜ் இருசக்கர வாகனத்தில் சேற்றில் சிக்கித் தவித்துள்ளார்.  சேற்றில் சிக்கிய பவுன்ராஜ் அதிலிருந்து மீள முடியாமல் தவித்து வந்த நிலையில் உதவி உதவி என கத்திக் கூச்சலிட்டும் யாரும் அங்கு வராததால் 112 என்ற மார்டன் கட்டுப்பட்டு அறைக்கு அவரது செல்போனில் தொடர்பு கொண்டு உதவி கேட்டுள்ளார். 

பின்னர் பவுன்ராஜ் செல்போன் எண்ணிற்கு அருகில் உள்ள துரைப்பாக்கம் தீயணைப்பு வீரர்கள் தொடர்பு கொண்டு எந்தப் பகுதியில் உள்ளீர்கள் என்று கேட்டதும் சேற்றில் சிக்கிக் கொண்டிருக்கும் பவுன்ராஜ் அவரது செல்போனில் இருந்து Location அனுப்பிய பின்னர் துரைப்பாக்கம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சேற்றில் சிக்கிக் கொண்டிருந்த இளைஞரையும், அவரது வாகனத்தையும் அடுத்த பத்து நிமிடத்தில் மீட்டனர். 

பின்னர் அந்த இளைஞருக்கு தண்ணீர் கொடுத்து அவரை சிறிது நேரம் இளைப்பாற வைத்து பின்னர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். ஆட்கள் நடமாட்டம் இல்லாத இருள் சூழ்ந்த பகுதியில் கூகிள் மேப் பார்த்துக் கொண்டே உணவு டெலிவரி செய்யச் சென்றபோது சேற்றில் சிக்கிக் கொண்ட இளைஞரை காப்பாற்ற யாரும் வராத நிலையில் மிகவும் அச்சத்தில் இருந்த இளைஞரை மீட்ட தீயணைப்பு வீரர்களுக்கு அந்த இளைஞர் கண்ணீர் மல்க நன்றியைத் தெரிவித்துள்ளார். உரிய நேரத்தில் வந்து காப்பாற்றிய தீயணைப்பு வீரர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. 


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

× Free India Logo
Welcome! Free India