கங்குவா திரைப்படத்தை வெளியிட தடை – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Home TamilNadu கங்குவா திரைப்படத்தை வெளியிட தடை – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
கங்குவா திரைப்படத்தை வெளியிட தடை – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
Spread the love

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் சூர்யா உள்ளிடோர் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள கங்குவா  திரைப்படம் உலகெங்கிலும் நாளை மறுநாள் வெளியாக உள்ளது. 

இந்த படத்தை சட்டவிரோதமாக 2365 இணையதளங்கள் மற்றும் கேபிள் டிவிகள் ஆகியவற்றில்  வெளியிடப்படுவதை தடுக்க வேண்டுமென அரசு மற்றும் தனியார் இணைய தள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு உத்தரவிடக் கோரி பட தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ க்ரீன்  தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி அப்தூல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் நிறுவனம் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியம் ஆஜராகி, உலகம் முழுவதும் 3,500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் கங்குவா படம் வெளியாகயுள்ளதாகவும், மிகுந்த பொருட்செலவில் படத்தை தயாரித்துள்ளதால், திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியானால் பெருத்த நஷ்டம் ஏற்படும் என்றும், அதன்மூலம் திரை கலைஞர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்றும் வாதிட்டார். இதையடுத்து, கங்குவா திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்த நீதிபதி, அவ்வாறு வெளியாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இணையதள சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

  


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

× Free India Logo
Welcome! Free India