எழுத்தாளரும் இயக்குனருமான 'குடிசை' ஜெயபாரதி காலமானார்..!

Home TamilNadu எழுத்தாளரும் இயக்குனருமான 'குடிசை' ஜெயபாரதி காலமானார்..!
எழுத்தாளரும் இயக்குனருமான 'குடிசை' ஜெயபாரதி காலமானார்..!
Spread the love

எழுத்தாளர், இயக்குனர், தேசிய விருது பெற்ற ஜெயபாரதி (குடிசை)வயது 77 நுரையீரல் தொற்று காரணமாக ஓமந்தூர் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனிற்றி இன்று காலை 6 மணிக்கு காலமாகி விட்டார். 

திரைப்பட இயக்குநரும், பிரபல எழுத்தாளருமாக விளங்கியவர் ஜெயபாரதி (வயது 77). இவர் கடந்த 1979ஆம் ஆண்டு திரள் நிதி (கிரவுட் பண்டிங்) முறையில் ‘குடிசை’ என்ற திரைப்படத்தை தயாரித்து சினிமா உலகில் பிரபலமானவர். திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு பத்திரிகையாளராகப் பணியாற்றியவர் ஆவார். 

மேலும் நண்பா நண்பா, உச்சி வெயில், ஊமை ஜனங்கள், ரெண்டும் ரெண்டும் அஞ்சு உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார். கடைசியாக 2010ம் ஆண்டு ‘புத்திரன்’ என்ற படத்தை இயக்கினார். இப்படத்துக்கு சிறந்த படம், சிறந்த நடிகர் சிறப்பு விருது (ஒய்.ஜி.மகேந்திரன்), சிறந்த நடிகை சிறப்பு விருது (சங்கீதா கிரிஷ்) என, தமிழக அரசின் 3 விருதுகள் கிடைத்தது. பிறகு ஜெயபாரதி படம் இயக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இத்தகைய சூழலில் தான் இவர் நுரையீரல் தொற்று காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (06.12.2024) காலை 6 மணியளவில் உயிரிழந்தார். இவரது மறைவுக்கு திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

பிரபலமான இயக்குநராக வலம் வந்த ஜெயபாரதி,  மிகவும் வறுமையில் வாடுவதாக தகவல் வெளியானது. 


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

× Free India Logo
Welcome! Free India