“எனக்கும் முதலமைச்சர் கனவு இருக்கு..”- திருமாவளவன் பேச்சு

Home TamilNadu “எனக்கும் முதலமைச்சர் கனவு இருக்கு..”- திருமாவளவன் பேச்சு
“எனக்கும் முதலமைச்சர் கனவு இருக்கு..”- திருமாவளவன் பேச்சு
Spread the love

எனக்கும் முதலமைச்சர் கனவு உண்டு என்று 20 வருடங்களுக்கு முன்பாக பத்திரிகையில் முதல் பக்கத்தில் வந்த செய்தியை சுட்டிக்காட்டி விசிக தலைவர் திருமாவளவன் பேசினார்.

பழனியில் தனியார் திருமண்டப திறப்பு விழா மேடையில் விசிக தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், நானும் முதலமைச்சராக வேண்டும், எனக்கும் முதலமைச்சர் கனவு உண்டு என்று 20 வருடங்களுக்கு முன்பாக பத்திரிகையில் முதல் பக்கத்தில் வந்த செய்தியை சுட்டிக்காட்டி பேசினார். அதற்காக இன்று முதல் புள்ளியை வைத்துள்ளோம். இன்னும் கோலங்கள் போட பல புள்ளிகள் தேவைப்படுகிறது. ஒரு புள்ளி வைத்துக் கொண்டு கோலம் போட முடியாது. நூற்றுக்கணக்கான புள்ளிகள் வைக்க வேண்டும். அடி எடுத்து வைத்தவுடன் ஆட்சியில் வென்றுவிட முடியாது. இப்போது பலர் கட்சி ஆரம்பித்து உடனே முதலமைச்சர் கனவோடு இருக்கிறார்கள் என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் மாற்றத்தை திருத்தத்தை ஏற்படுத்தக்கூடிய கட்சியாக விடுதலை சிறுத்தை கட்சிகள் இருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்திலும் சிறுத்தை கொடி பறக்கிறது.கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா, தென்னிந்திய மாநிலம் முழுவதும் சிறுத்தைகள் கொடி பறக்கிறது. இப்படி ஒரு நம்பிக்கை மக்கள் மீது வைத்திருக்கிறோம். மக்கள் நம் மீது வைத்திருக்கிறார்கள்.அதற்காக கட்சியின் கட்டமைப்பை உருவாக்கி இருக்கிறோம். ஒரு சட்டமன்றத்துக்கு ஒரு மாவட்ட செயலாளர் என நியமனம் செய்துள்ளோம். எந்த கட்சியிலும் இல்லாத வகையில் புதிய பதவியை கொடுத்து கட்சியை வளர்த்து வருகிறோம் என்று தெரித்தார்.

மேலும், பழனி முருகனைக் காண அதிகாலை 4:30 மணிக்கு எழுந்து ஐந்து முப்பதுக்கு முதல் கால பூஜையில்  சென்று முருகனைக் காண மிக அருகில் அமர்ந்து ’முருகன் என்னை காண’ நான் அவரை காண  என புன்னகையோடு திருமாவளவன் தெரிவித்தார்.


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

× Free India Logo
Welcome! Free India