“உதயநிதியை இங்கே கூப்பிடவா?”-போலீசாரை இழிவாக பேசி மிரட்டிய தம்பதியால் பரபரப்பு

Home TamilNadu “உதயநிதியை இங்கே கூப்பிடவா?”-போலீசாரை இழிவாக பேசி மிரட்டிய தம்பதியால் பரபரப்பு
“உதயநிதியை இங்கே கூப்பிடவா?”-போலீசாரை இழிவாக பேசி மிரட்டிய தம்பதியால் பரபரப்பு
Spread the love

சென்னை மெரினா கடற்கரை லூப் சாலையில் நள்ளிரவில் நிறுத்தப்பட்ட காரை எடுக்கும்படி கூறிய ரோந்து போலீசாரை இழிவாக பேசிய தம்பதியால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை மெரினா கடற்கரை லூப் சாலையில் மயிலாப்பூர் போலீசார் நேற்றிரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது சாலையில் நிறுத்தட்டு இருந்த காரை எடுக்கும்படி போலீசார் காருக்குள் இருந்த தம்பதியிடம் கேட்டதாக கூறப்படுகிறது.ஆனால் ரோந்து போலீசார் மிக இழிவாக பேசி தம்பதி அநாகரீகமாக நடந்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.இதனை போலீசார் வீடியோ பதிவு செய்தனர்.அந்த வீடியோ வெளியாகி உள்ளது. 

அதில், போலீசார் நீங்கள் யார் என்று கேட்டதும், இருவரும் போஸ் கொடுத்து கிண்டல் செய்தனர். மேலும் அவர், நான் உதயநிதி ஸ்டாலினை இங்கேயே கூப்பிடுவேன் பார்க்கிறேயா? என போலீசாரை மிரட்டும் தொனியில் பேசினார். வையாபுரி முஞ்சு, பல்லி மூஞ்சு என போலீசார் கிண்டல் கேலி செய்தார். 

‘உன்னால் முடிந்ததை பாரு’ என மிரட்டல் விடுத்தார் அந்த நபர், நான் குடித்து தான் இருக்கிறேன். என்னால் வண்டி எடுக்க முடியாது என அந்த நபர் தொடர்ந்து போலீசாரை மிரட்டினார். நாளை காலை உங்க முகவரி எல்லாத்தையும் எடுத்து உங்களை காலி செய்து விடுவேன் என மிரட்டி அந்த நபர் இறுதியாக காரை வட்டமிட்டபடி எடுத்து சென்றார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி உள்ளது. அந்த தம்பதி குறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இது குறித்தான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

× Free India Logo
Welcome! Free India