Spread the love வந்தே பாரத் ரயிலில் உணவு தரமாக இல்லை படுமோசம் என நடிகர் பார்த்திபன் குற்றம்சாட்டியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2022ம் ஆண்டு தனது சொந்த மாநிலமான குஜராத் தலைநகர் காந்தி நகரில் இருந்து மகாராஷ்டிராவின் மும்பையை இணைக்கும் வகையில் வந்தே பாரத் விரைவு ரயில் சேவை தொடங்கி வைத்தார்.இதைத்தொடர்ந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இதேபோல் தமிழகத்தில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகிறது. வந்தே பாரத் ரயிலில் சைவம் மற்றும் அசைவ உணவுகள்...

கனமழை எச்சரிக்கை: 3 நாட்களுக்கு கூடுதலாக மெட்ரோ ரயில்கள் இயக்கம்
Spread the love சென்னையில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் தரைவழிபோக்குவரத்தை சமாளிக்க 3 நாட்களுக்கு கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் தொடர் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வெளி மாவட்டங்களில் இருந்து நீர் அகற்றும் பம்புகள் மற்றும் மரம் வெட்டும் கருவிகள் உள்ளிட்டவை சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.மேலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்துள்ள தீயணைப்புப்படை வீரர்கள், ரப்பர் படகுகள் உள்ளிட்ட பொருட்களை தயார் நிலையில் வைத்துள்ளனர். இந்த நிலையில் சென்னையில்...

சென்னை காவல் ஆணையருக்கு பறந்த உத்தரவு- மனித உரிமை ஆணையம் அதிரடி
Spread the love சென்னை காவல் ஆணையர் அருண் வருகிற 21ஆம் தேதி நேரில் ஆஜராக மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு பிறகு சென்னை மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்ற அருண், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது, ரவுடிகளுக்கு புரியும் மொழியில் இனி பேசுவோம் என கூறியது, காவல்துறை மரணங்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் அமைப்புகள் இடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து மூன்று ரவுடிகள் அடுத்தடுத்து என்கவுன்டர் செய்யப்பட்டனர். இந்த பரபரப்பு அடங்குவதற்கு...

கனமழை எச்சரிக்கை: மீட்பு படை வீரர்கள் சென்னைக்கு வரவழைப்பு
Spread the love தாழ்வான பகுதிகளை கண்டறிந்து மீட்பு படகுகளை முன்கூட்டியே நிறுத்தி வைத்துள்ளதாக தீயணைப்பு துறை வடசென்னை மாவட்ட அதிகாரி லோகநாதன் தெரிவித்துள்ளார். பருவ மழையை எதிர்கொள்வதற்காக தமிழக அரசு முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதேபோல வெள்ள பாதிப்புகள் இருந்தால் பொதுமக்களை மீட்கவும், பொது மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்யவும் தமிழக தீயணைப்பு துறை தயார் நிலையில் இருக்கிறது. அதற்காக சென்னைக்கு வெளி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளனர். கனமழை எச்சரிக்கையை ஒட்டி தீயணைப்பு துறையினர் உபகரணங்கள்,...

மலைப்பகுதிகளில் இ-பாஸ் நடைமுறை -சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி
Spread the love நீதிமன்ற உத்தரவின்படி ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பகுதிகளில் இ-பாஸ் நடைமுறையை முறையாக அமல்படுத்தப் படவில்லை என சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் முறையை அமல்படுத்த வேண்டும் என, நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டிருந்தது.இந்த இ-பாஸ் வழங்கும் முன், வாகனங்களில் வருவோரிடம், என்ன மாதிரியான வாகனம், எத்தனை பேர் வருகின்றனர், ஒரு நாள்...

பட்டமளிப்பு விழாவில் ஆளுநரிடம் மனு- விடுதியை ஆய்வு செய்த அமைச்சர்
Spread the love கோவை பாரதியார் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவின்போது விருதுநகரை சேர்ந்த பிரகாஷ் என்ற முனைவர் படிப்பு மாணவர், திடீரென தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியிடம் மனு ஒன்றை வழங்கினார். அந்த மனுவில் விடுதியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் நிதி முறையாக கையாளப்படுவதில்லை என புகார் தெரிவித்து இருந்தார். விடுதி கட்டணம் அதிகமாக இருப்பதுடன், முறையான பராமரிப்பு இல்லை எனவும் புகார் தெரிவித்து இருந்தார்.இதன்காரணமாக பட்டமளிப்பு விழா மேடையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.மனுவை வாங்கிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நடவடிக்கை எடுக்கப்படும் என...

அதிவேகமாகச் சென்ற உயர் ரக பைக்குகள் பறிமுதல்
Spread the love சென்னை கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மகாபலிபுரம் சாலை ஆகிய முக்கிய சாலைகளில் போக்குவரத்துக்கு இடயூறாகவும், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும் இருச்சக்கர வாகனங்களை அதிவேகமாக ஓட்டிச் சென்று அதன் மூலமாக சாலை விபத்துகளை ஏற்படுத்தி வருவதில் சில உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும் பல்வேறு குற்றச்சாட்டு எழுந்துள்ளன. இக்குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து தாம்பரம் மாநகரக் காவல் ஆணையாளர் அபின் தினேஷ் மொடாக் அவர்களின் உத்தரவின்பேரில் பள்ளிக்கரணை போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு ஆய்வாளர் நடராஜன் உள்ளிட்ட போலீசார் மற்றும் கேளம்பாக்கம் போக்குவரத்துப் பிரிவு போலீசார்...

கார் மோதி பெண் காவலர் காலில் எலும்பு முறிவு
Spread the love வேலூர் மாவட்டம் கூத்தாண்டவர் கோயில் தெருவைச் சேர்ந்த பெண் காவலர் லோகேஸ்வரி (23) இவர் தற்போது கோயம்பேடு போக்குவரத்துப் பிரிவில் காவலராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று காலை காவலர் லோகேஸ்வரி கோயம்பேடு 100 அடி சாலையில் உள்ள டென்ஸ் ஸ்கொயர் மால் பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது டீ அருந்துவதற்காக சென்ற காவலர் லோகேஸ்வரி கேம்ஸ் வில்லேஜ் சிக்னல் அருகே சாலையைக் கடக்க முயன்ற போது அந்த வழியாக வேகமாக வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த போலீஸ்...

இந்த முறை அப்படி ஆகாது- நம்பிக்கை கொடுத்த உதயநிதி ஸ்டாலின்
Spread the love இந்த முறை தமிழ்நாடு அரசும், தமிழ்நாட்டு மக்களும் மழையை வெற்றிகரமாக எதிர்கொள்வோம் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வரும் முதலமைச்சர் கோப்பை போட்டிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், ” முதலமைச்சர் கோப்பை போட்டிகளை இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்திருக்கிறேன். முதலமைச்சர் கோப்பைக்கு பரிசு தொகை மட்டும் ரூ.32 கோடி வழங்கப்படுகிறது. சென்ற ஆண்டு 5 லட்சம் வீரர்,...

கன மழை எச்சரிக்கை- மின்சாரத்துறை உத்தரவு
Spread the love சென்னை முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்ள மண்டல வாரியாக அதிகாரிகளை நியமனம் செய்து மின்சாரத்துறை உத்தரவிட்டுள்ளது. சென்னை உள்பட 4 மாவட்டங்களில் தொடர் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஆகியோர் ஆலோசனைக்கூட்டம் நடத்தினர். இதில் மாவட்ட வாரியாக கண்காணிப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் சென்னையில் மழைநீர் தேங்கும் இடங்களின் பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், மெட்ரோ பணிகள் நடைபெறும் இடங்களில் மழைநீர் தேங்கும் இடங்களில் மக்களை...

