Spread the love தமிழகத்தின் முன்னாள் முதல்வரான மு.கருணாநிதியின் மகளான செல்வியின் கணவர் முரசொலி செல்வம் இன்று காலமானார். கோபாலபுரம் இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில் முரசொலி செல்வம் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அந்த இரங்கலில்… “முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் அன்பு மருமகனும், அவரது மனசாட்சியான முரசொலி மாறனின் இளவலும், தங்கை செல்வியின் கணவருமான என் அன்புக்குரிய முரசொலி செல்வம் மறைந்தார் என்ற செய்தி இடி போல என் நெஞ்சத்தைத் தாக்கி, வேதனைக் குருதியை வடியச் செய்கிறது....

மாநிலக் கல்லூரி மாணவர் கொலை – பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 5 பேர் அதிரடி நீக்கம்
Spread the love மாநிலக் கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 5 பேரை நீக்கம் செய்து கல்லூரி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னையில் ரூட் தல விவகாரத்தில், மாநிலக் கல்லூரி மாணவர்கள் பச்சையப்பன் கல்லூரிகள் அடிக்கடி மோதிக்கொள்வது தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில் கடந்த 4ம் தேதி சென்னை சென்ட்ரல் நிலையம் அருகே மாநிலக்கல்லூரி மாணவர்கள் மற்றும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் மாநிலக்கல்லூரி மாணவர் சுந்தரை பலர் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் பலத்த...

TNPSC தேர்வு – ஆண்டு அட்டவணை வெளியீடு
Spread the love குரூப் -1 தேர்வு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி ஆண்டு அட்டவணையை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த டிஎன்பிஎஸ்சி தேர்வு ஆண்டு அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதில், குரூப் 1 தேர்வு அடுத்த ஆண்டு ஜூன் 15ஆம் தேதி நடைபெறும். தேர்வு குறித்த அறிவிப்பு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. மேலும், குரூப் 4 தேர்வு அடுத்தாண்டு ஜூலை 13ஆம் தேதி நடைபெறும் எனவும், ஏப்ரல் 25ஆம் தேதி தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் அறிவிக்கப்பட்டுள்ளது. குரூப்...

போலீஸ் வாக்கி டாக்கியை பறித்து தண்ணீரில் எறிந்த வழக்கு.. இளைஞருக்கு நீதிமன்றம் போட்ட உத்தரவு
Spread the love மது போதையில் போலீசாரின் வாக்கி டாக்கியை பிடிங்கி தண்ணீரில் எறிந்த இளைஞருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த மாதம் 18ம் தேதி இரவு கடலூர் மாவட்டம் கிளியனூர் அருகே உள்ள மதுக்கடை அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த போது அபினேஷ் என்ற நபர் தனது நண்பருடன் அங்கு நின்று கொண்டிருந்தார். அப்போது, அபினேஷ் மற்றும் அவரது நண்பரை அங்கிருந்து செல்லுமாறு காவல்துறையினர் கூறியுள்ளனர். இதனை ஏற்க மறுத்து காவல்துறையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அபினேஷ் போலீசாரின் வாக்கி...

”உடனே நடவடிக்கை எடுங்க…” அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
Spread the love புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டின மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ”புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து வங்கக்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 21 பேரை சிங்களக் கடற்படை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. அவர்களின் 4 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வங்கக்கடலில் பாரம்பரிய உரிமை உள்ள இடத்தில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படை தொடர்ந்து அத்துமீறி கைது...

சாம்சங் தொழிலாளர்கள் 625 பேர் மீது பாய்ந்த வழக்கு.. காஞ்சியில் தொடரும் பரபரப்பு
Spread the love காஞ்சிபுரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில் சாம்சங் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றுபவர்களில் சி.ஐ.டி.யூ உள்ளிட்ட தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் , சம்பள உயர்வு, 8 மணி நேர வேலை, சங்கத்தைப் பதிவு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சுங்குவார்சத்திரம் பகுதியில் பந்தல் அமைத்து தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். தொழிற்சங்க நிர்வாகிகளிடம் 5 முறை நிர்வாகம் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு...

தீபாவளி போனஸ்.. அரசு கொடுத்த ஆஹா அறிவிப்பு
Spread the love தமிழ்நாடு அரசின் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்களுக்கும் தீபாவளி போனஸ் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். வருகிற அக்டோபர் 31ம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் c மற்றும் d பிரிவு தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் வரை போனஸ் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மிகை ஊதியம் பெற தகுதியுள்ள நிரந்தரத் தொழிலாளர்கள் குறைந்த பட்சம் 8 ஆயிரத்து 400 ரூபாயும், அதிகபட்சம்...

சென்னையில் பள்ளத்தால் பறிப்போன உயிர்- சிசிடிவி வெளியாகி அதிர்ச்சி
Spread the love சென்னையில் மூடாபடாத பள்ளத்தில் தவறிவிழுந்ததில் மாநகர போக்குவரத்து ஓட்டுநர் மீது பேருந்து மோதியதில் பரிதாபமாக உயிரிழந்த சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வேளச்சேரி பிரதான சாலையில் மாநகர பேருந்து ஓட்டுநர் முருகேசன் (55), என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது பீனிக்ஸ் மால் அருகே சாலையில் இருந்த பள்ளத்தில் சிக்காமல் இருக்க பிரேக் பிடித்தபோது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த இருசக்கர வாகனம் மோதி இருவரும் கீழே விழுந்தனர். இதில் வலது பக்கம் விழுந்த முருகேசன் மீது...

சிதம்பரம் கோவில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியது தவறில்லை- எச்.ராஜா
Spread the love சிதம்பரம் கோவில் கருவறையில் தீட்சிதர்கள் விளையாடவில்லை. கோவில் வளாகத்தில் தான் விளையாடினார்கள். அதில் ஒன்றும் தவறில்லை என எச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார். திருவாரூரில் பாஜக உறுப்பினர் சேர்க்கை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக பாஜக ஒருங்கிணைப்புக்குழு தலைவர் எச். ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ அரியானாவில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியாக செயல்படவில்லை என கூறும் காங்கிரஸ், ஜம்மு காஷ்மீரில் ஏன் கூறவில்லை? என கேள்வி எழுப்பினார்.மேலும், சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தில் தமிழக...

“தமிழக அரசே போராட விடு” – தொழிலாளர்களுக்கு பா.ரஞ்சித் ஆதரவு
Spread the love தங்கள் உரிமை கேட்டுப் போராடும் தொழிலாளர்களை போராட விடு என சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக பா.ரஞ்சித் கருத்து தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் பகுதியில் இயங்கி வரும் சாம்சங் தொழிற்சாலையில் பணிபுரியும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிரந்தர தொழிலாளர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொழிற்சங்கத்தினை துவங்கி அதனை அங்கீகரிக்க கோரி, தொழிலாளர்கள் சம்சங் நிறுவனத்திற்கு ஒரு கடிதத்தை அனுப்பி வைத்தனர். ஆனால் கடிதம் அனுப்பியும் எவ்வித பதில் அளிக்காமல் நிர்வாகம் காலம் தாழ்த்தி வந்ததாக தொழிலாளர்கள் மத்தியில் கூறப்பட்டது. அந்த நிலையில்...

