Spread the love நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்து மதத்தினரின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் சிறுவர் முதல் பெரியவர் வரை புத்தாடை அணிந்து, கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி, இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும், தீபாவளியை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். மேலும், புதுமண தம்பதிகள் தங்கள் தலை தீபாவளியை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், தீபாவளியான இன்று சென்னையில், காலை 6 மணியில் இருந்து...

தீபாவளி டைம்…3 நாள்ல இத்தனை பேர் பஸ்ல சொந்த ஊருக்கு பயணிச்சிருக்காங்க.. – அரசு வெளியிட்ட புள்ளி விவரம்!
Spread the love சென்னை: தீபாவளி பண்டிகையை கொண்டாட, சென்னையிலிருந்து சொந்த ஊருக்குச் செல்ல கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். நாடு முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து சென்னையில் பணிபுரிந்து வரும் வெளியூர்வாசிகள், தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக தங்கள் குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். இன்று பேருந்துகள், ரயில்களில் மிகவும் அதிகமான கூட்டம் இருக்கும் என்பதால், அக்.29ம் தேதி மாலையில் இருந்தே ஏராளமான மக்கள் சென்னையில் இருந்து கிளம்பிவிட்டனர். மக்களுக்கு ஏதுவாத சிறப்பு பேருந்து வசதிகளையும் ஏற்படுத்தியது...

சென்னையில் இன்று கொட்டித்தீர்த்த கனமழை – தீபாவளிக்கு மழை பெய்யும் இடங்கள் இதோ…
Spread the love சென்னையில் இன்று ஒரு மணி நேரத்தில் கனமழை கொட்டித்தீர்த்ததால் சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். தமிழ்நாட்டில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில், சென்னையில் இன்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இந்த நிலையில், திடீரென்று சுமார் ஒரு மணி நேரமாக சென்னை நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், கோயம்பேடு, புரசைவாக்கம், அண்ணா நகர் உள்பட சென்னையில் பெரும்பாலான இடங்களின் பலத்த மழை...

தவெக மாநாட்டில் விஜய்க்கு கொடுக்கப்பட்ட வீரவாள்- இத்தனை சிறப்புகளை கொண்டதா?
Spread the love மாநாட்டில் விஜய் கையில் கொடுக்கப்பட்டது சோழர் காலத்து வடிவிலான வீரவாள் எனவும், அதில் வெள்ளி முலாம் பூசப்பட்டு ஐம்பொன்னால் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக அந்த வாளை வடிவமைத்து கொடுத்த சுவாமிமலை சிற்பக் கலைஞர்கள் தெரிவித்துள்ளனர். நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டி உள்ள வி.சாலையில் கடந்த 27ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான தவெக தொண்டர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு...

தேவர் ஜெயந்தியில் தவெக வாகனங்கள் பறிமுதல் – போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
Spread the love தேவர் ஜெயந்தியை முன்னிட்டு தவெக சார்பில் மரியாதை செய்ய இருசக்கரத்தில் வந்த நிர்வாகிகளின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதால் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மதுரையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117வது ஜெயந்தி மற்றும் 62வது குருபூஜை முன்னிட்டு இன்று அவருக்கு மாலை மரியாதை செய்து வருகின்றனர். இந்த நிலையில் கோரிப்பாளையம் தேவர் சிலை மற்றும் தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள மருது பாண்டியர்களின் திருவுருவ சிலைகளுக்கு மாலை மரியாதை செய்வதற்காக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும் வருகை தந்த வண்ணமே உள்ளனர். இந்த...

தீபாவளி பண்டிகை – அரசியல் தலைவர்களின் வாழ்த்து
Spread the love தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி, தமிழிசை செந்தரராஜன், பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தித்திக்கும் இனிய தீபாவளித் திருநாளில், மக்கள் அனைவரது வாழ்விலும் துன்பங்கள் நீங்கி, இன்பங்கள் பெருகட்டும் எனக் கூறியுள்ளார். அத்துடன், இன்று பெருகும் இன்பம் அனைவரிடமும் என்றும் நிலைத்திருக்கட்டும் எனவும் மக்கள் அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற்று இன்பமுடன் வாழ்ந்திட வேண்டும் என மனதார வாழ்த்துவதாகவும் கூறியுள்ளார். பாஜக மூத்த தலைவர் தமிழிசை...

முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி – ரசியல் கட்சித் தலைவர்கள் மரியாதை
Spread the love முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவையொட்டி பசும்பொன்னில் உள்ள அவரது நினைவாலயத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மரியாதை செலுத்தினர். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவாலயத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அத்துடன் சிலைக்கு மாலை அணிவித்தும் தீபாராதனை காட்டியும் வழிபாடு செய்தார். இந்நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், சி.விஜயபாஸ்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர். அதேபோல் திருச்சி எம்.பி துரை வைகோ, தேவர் நினைவாலயத்தில்...

நெல்லையில் நள்ளிரவில் நடந்த பயங்கரம்: தொழிலாளி கொலை – 4 பேருக்கு அரிவாள் வெட்டு
Spread the love நெல்லையில் நள்ளிரவில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் தொழிலாளி ஒருவர் சரமாரி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 4 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. நெல்லையை அடுத்த பேட்டை அருகே உள்ள மலையாளமேடு உடையவர் தெருவை சேர்ந்தவர் பரமசிவம்(வயது 50). இவரது மகன் மாரிசெல்வன். அதே பகுதியில் வசித்து வருபவர் மண்டையன் பெருமாள். தொழிலாளியான இவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இவரது பெயர் ரவுடிகள் பட்டியலில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார். இவரது மகன்கள் மருது என்ற...

போலி சான்றிதழுடன் மருத்துவ சீட் கேட்டு வாக்குவாதம்- வசமாக சிக்கிய 2 இருவரிடம் விசாரணை
Spread the love நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றதாக போலி சான்றிதழ் மற்றும் போலி சேர்க்கை சான்றிதழை கொண்டு வந்த இளைஞர் மற்றும் அவரது பெற்றோரிடம் கீழ்ப்பாக்கம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். எம்எம்சி கல்லூரியில் இன்று காலை சேர்க்கை காண அனுமதி சீட்டுடன் மாணவர் ஒருவர் தனது பெற்றோரிடம் வந்து, அங்கு கல்லூரி அதிகாரிகளிடம் ஏன் இன்னும் தனக்கு கல்லூரியில் சேர்வதற்கான எந்த அழைப்பும் வரவில்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அதிகாரிகள் அவர்கள் வைத்திருந்த சான்றிதழ்களை பார்த்ததில் அவ்வாறு எந்தப் பெயரும்...

தலைத்தூக்கும் ராகிங் கொடுமை – தலைநகரில் மாணவருக்கு நேர்ந்த அவலம்
Spread the love சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில் ராகிங் கொடுமையால் 3ஆம் ஆண்டு மாணவர் மீது தாக்குதல் நடத்திய 5ஆம் ஆண்டு மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மாணவர் விடுதியில் தங்கி ஆலன் கிரைசா என்ற 3ஆம் ஆண்டு மாணவர் படித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 24 ஆம் தேதி கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதியில் வைத்து 3ஆம் ஆண்டு மாணவர் ஆலன் கிரைசா மீது பீர் பாட்டிலால் தாக்குதல் நடந்தப்பட்டுள்ளது. 3ஆம் ஆண்டு...

