தமிழ்நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாட்டம்.. புத்தாடை உடுத்தி பட்டாசு வெடித்து மகிழ்ச்சி

தமிழ்நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாட்டம்.. புத்தாடை உடுத்தி பட்டாசு வெடித்து மகிழ்ச்சி

Spread the love      தீபாவளி பண்டிகை இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் காலை முதலே புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்து மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. தஞ்சையில் தீபாவளி பண்டிகை களைகட்டி உள்ளது. மக்கள் அதிகாலையில்  குளித்து புத்தாடை உடுத்தி வீட்டின் வாசல் முன்பு பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.  ஈரோடு வ.உ.சி பூங்கா மைதானத்தில் செயல்பட்டு வரும் நேதாஜி தினசரி காய்கறி சந்தை வியாபாரிகள் தீபாவளி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது,  50க்கும் மேற்பட வியாபாரிகள்...

”தீபாவளி வாழ்த்து சொல்லமாட்டோம்னு இருந்தாங்க..ஆனா இப்போ…”

”தீபாவளி வாழ்த்து சொல்லமாட்டோம்னு இருந்தாங்க..ஆனா இப்போ…”

Spread the love      தீபாவளிக்கு இது வரை வாய்திறக்காதவர்களும் இப்போது வாய் திறந்து  வாழ்த்து சொல்லி இருக்கிறோர் இதுவே எங்களுக்கு வெற்றி தான் என தெரிவித்துள்ளார் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன். நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் புத்தாடை உடுத்தி, இனிப்புகளை வழங்கி, பட்டாசு வெடித்து தீபாவளியை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.  இந்நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள  இல்லத்தில் பட்டாசு வெடித்து மக்களுக்கும், தூய்மை பணியாளர்களுக்கும் இனிப்புகள் வழங்கி  தீபாவளி பண்டிகை கொண்டாடினார்  மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்....

ரயில் தடம்புரண்டு விபத்து… சக்கரம் கழன்று தடம் புரண்டதாக தகவல்

ரயில் தடம்புரண்டு விபத்து… சக்கரம் கழன்று தடம் புரண்டதாக தகவல்

Spread the love      சென்னை சென்ட்ரலில் இருந்து போடி சென்ற ரயில் மதுரை அருகே திடீரென தடம் புரண்டது. தீபாவளிப் பண்டிகையை ஒட்டி சிறப்பு ரயில்கள் இயக்க கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், தெற்கு ரயில்வே 4 நாட்களுக்கு முன்பு சிறப்பு ரயில்களை அறிவித்தது. குறிப்பாக சென்னையில் இருந்து மதுரைக்கு சொந்த ஊர் செல்வோருக்காக சிறப்பு ரயில்கள் விடப்பட்டது. அக்டோபர் 29, 30, நவம்பர் 2ம் தேதிகளில் தாம்பரத்தில் இருந்து மதுரைக்கும், மதுரையில் இருந்து தாம்பரத்திற்கும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அதனடிப்படையில் சென்னை சென்ட்ரலில் இருந்து போடி...

விஜய்யின் தவெக மாநாடு குறித்து கருத்து தெரிவித்த நடிகர் ரஜினி

விஜய்யின் தவெக மாநாடு குறித்து கருத்து தெரிவித்த நடிகர் ரஜினி

Spread the love      தனக்கு வாழ்த்து சொல்ல வந்த ரசிகர்களை சந்தித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த். நடிகர் ரஜினியின் பிறந்த நாள் மற்றும் தீபாவளி, பொங்கல், ஜனவரி 1 ஆகிய முக்கிய பண்டிகை நாட்களில் அவரை சந்திப்பதற்காக ரசிகர்கள் ரஜினியின் வீட்டிற்கு வருவது வழக்கம் நடிகர் ரஜினியும் வெளியில் வந்து ரசிகர்களை சந்திப்பது வழக்கம், இன்று தீபாவளி பண்டிகையையொட்டி ரஜினிக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டின் முன்பு இன்று காலையிலேயே ஏராளமான ரசிகர்கள் திரண்டு உள்ளனர் அவரது...

தீபாவளி; மோசமடைந்த காற்றின் தரக் குறியீடு

தீபாவளி; மோசமடைந்த காற்றின் தரக் குறியீடு

Spread the love      தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் காற்றின் தரக் குறியீடு மோசமடைந்துள்ளது. நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலை முதலே மக்கள் பட்டாசுகளை வெடிக்கத் தொடங்கி விட்டனர். இதனால், சென்னை மாநகரம் காலையிலேயே புகைமூட்டமாக மாறியது. சென்னையில் தொடர்ந்து இன்று காற்று மாசு அதிகரித்த வண்ணம் உள்ளது. சென்னையில் 3 இடங்களில் காற்றின் தரக்குறியீடு மோசமடைந்துள்ளது.  திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 204 என்ற அளவில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது. இதேபோல், செங்கல்பட்டு மாவட்டத்தில் 154, கடலூரில்...

தீபாவளி பண்டிகை – தலைவர்கள் வாழ்த்து

தீபாவளி பண்டிகை – தலைவர்கள் வாழ்த்து

Spread the love      தீபாவளி பண்டிகையையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசு தலைவர், பிரதமர் மோடி, தமிழ்நாடு ஆளுநர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.  தீபாவளி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,  தீபாவளி என்பது மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தின் பண்டிகை. அறியாமைக்கு எதிராக அறிவும், தீமைக்கு எதிராக நன்மையும் வெற்றி பெற்றதைக் குறிக்கும் விழாவாகும் என குறிப்பிட்டுள்ளார்.  தீபாவளி பண்டிகை பிரகாசமான எதிர்காலத்துக்கான நம்பிக்கையையும் தூண்டுவதாகவும், மாசு இல்லாத தீபாவளியைக்...

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகல கொண்டாட்டம்.. பட்டாசுகள் வெடித்து உற்சாக கொண்டாட்டம்

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகல கொண்டாட்டம்.. பட்டாசுகள் வெடித்து உற்சாக கொண்டாட்டம்

Spread the love      நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.  இந்து மதத்தினரின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் சிறுவர் முதல் பெரியவர் வரை புத்தாடை அணிந்து, கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி, இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும்,  தீபாவளியை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். மேலும், புதுமண தம்பதிகள் தங்கள் தலை தீபாவளியை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், தீபாவளியான இன்று சென்னையில், காலை 6 மணியில் இருந்து...

தீபாவளி டைம்…3 நாள்ல இத்தனை பேர் பஸ்ல சொந்த ஊருக்கு பயணிச்சிருக்காங்க.. – அரசு வெளியிட்ட புள்ளி விவரம்!

தீபாவளி டைம்…3 நாள்ல இத்தனை பேர் பஸ்ல சொந்த ஊருக்கு பயணிச்சிருக்காங்க.. – அரசு வெளியிட்ட புள்ளி விவரம்!

Spread the love      சென்னை: தீபாவளி பண்டிகையை கொண்டாட, சென்னையிலிருந்து சொந்த ஊருக்குச் செல்ல கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். நாடு முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து சென்னையில் பணிபுரிந்து வரும் வெளியூர்வாசிகள், தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக தங்கள் குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். இன்று பேருந்துகள், ரயில்களில் மிகவும் அதிகமான கூட்டம் இருக்கும் என்பதால், அக்.29ம் தேதி மாலையில் இருந்தே ஏராளமான மக்கள் சென்னையில் இருந்து கிளம்பிவிட்டனர். மக்களுக்கு ஏதுவாத சிறப்பு பேருந்து வசதிகளையும் ஏற்படுத்தியது...

சென்னையில் இன்று கொட்டித்தீர்த்த கனமழை –  தீபாவளிக்கு மழை பெய்யும் இடங்கள் இதோ…

சென்னையில் இன்று கொட்டித்தீர்த்த கனமழை –  தீபாவளிக்கு மழை பெய்யும் இடங்கள் இதோ…

Spread the love      சென்னையில் இன்று ஒரு மணி நேரத்தில் கனமழை கொட்டித்தீர்த்ததால் சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். தமிழ்நாட்டில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில், சென்னையில் இன்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இந்த நிலையில், திடீரென்று சுமார் ஒரு மணி நேரமாக சென்னை நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், கோயம்பேடு, புரசைவாக்கம், அண்ணா நகர் உள்பட சென்னையில் பெரும்பாலான இடங்களின் பலத்த மழை...

தவெக மாநாட்டில் விஜய்க்கு கொடுக்கப்பட்ட வீரவாள்- இத்தனை சிறப்புகளை கொண்டதா?

தவெக மாநாட்டில் விஜய்க்கு கொடுக்கப்பட்ட வீரவாள்- இத்தனை சிறப்புகளை கொண்டதா?

Spread the love      மாநாட்டில் விஜய் கையில் கொடுக்கப்பட்டது சோழர் காலத்து வடிவிலான வீரவாள் எனவும், அதில் வெள்ளி முலாம் பூசப்பட்டு ஐம்பொன்னால் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக அந்த வாளை வடிவமைத்து கொடுத்த சுவாமிமலை சிற்பக் கலைஞர்கள் தெரிவித்துள்ளனர்.  நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டி உள்ள வி.சாலையில் கடந்த 27ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான தவெக தொண்டர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு...

× Free India Logo
Welcome! Free India