விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தலைமையிலான மது ஒழிப்பு மகளிர் மாநாடு இன்று திண்டிவனத்தில் நடைபெற்றது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சிமட்டுமின்றி வேறு பல கட்சியினைச் சேர்ந்தோரும் இந்த மாநாட்டி பங்கு பெற்றனர். இந்த மாநாட்டில் மது ஒழிப்பு தொடர்பான 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றை தொல்.திருமாவளவன் வாசித்தார். நிறைவேற்றப்பட்ட 13 தீர்மானங்கள் 1) மதுவிலக்கை தேசிய கொள்கையாக அறிவிக்க வேண்டும். 2) மதுவிலக்கை அமல்படுத்தும் மாநில அரசுக்கு மத்திய அரசு சிறப்பு நிதி அளிக்க வேண்டும்....
Category: TamilNadu
யாரும் உழைப்பதற்கு தயாராக இல்லை – கிராம சபை கூட்டத்தில் ஆதங்கப்பட்ட அமைச்சர்
இப்பொழுது யாரும் உழைப்பதற்கு தயாராக இல்லை என கிராம சபை கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே மேலபட்டமங்களம் ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டார். பின்னர் பொதுமக்களிடையே பேசிய அவர், “இன்றைக்கு கிராமங்களில் அடிப்படை வசதிகள் நிரம்பி இருக்கிற ஒரே மாநிலம் தமிழ்நாடுதான் என்றார். ஒரு ஊராட்சியில் இருந்து 4 லட்சம் ரூபாய் மட்டும்தான் அரசாங்கத்திற்கு...
ரூ.10 லட்சம் லஞ்சம் கேட்டு மிரட்டல் – திமுக கவுன்சிலர் மீது புகார்
குடிநீர் மற்றும் கழிவுநீர் ஓப்பந்த பணிகளை மேற்கொண்டு வரும் ஒப்பந்ததாரிடம் ரூ.10 லட்சம் லஞ்சம் கேட்டு மிரட்டல் விடுத்த திமுக கவுன்சிலர் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலை விஜிபி அமுதா நகர் கூவம் நதிக்கரை ஓரம் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் சென்னை குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் கழிவுநீர் நிர்வாகம் சார்பாக கழிவுநீர் இணைப்புக் குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. 56 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் இந்த பணிகளை நாகராஜன் கன்ஸ்ட்ரக்ஷன் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த நாகராஜன் ஓப்பந்த அடிப்படையில் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த...
ஏடிஎம் கொள்ளை கும்பலை பிடித்தது தமிழக காவல்துறைக்கு பெருமை – டிஜிபி பாராட்டு
கேரள மாநிலம், திருச்சூரில் கடந்த 27ம் தேதி மூன்று ஏடிஎம்களில் பணத்தை கொள்ளையடித்து, தமிழகம் நோக்கி வந்த ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த கொள்ளைக் கும்பலை நாமக்கல் மாவட்ட காவல்துறையினர் வெப்படை அருகே சுற்றி வளைத்து பிடித்தனர். இந்த சம்பவத்தில் கொள்ளை கும்பலைச் சேர்ந்த ஜுமாந்தின் என்பவர் சுட்டு கொல்லப்பட்டார். அசார் அலி என்ற மற்றொரு கொள்ளையன் பலத்த காயமடைந்தார். ஐந்து பேர் பிடிபட்டனர். கொள்ளையர்கள் தாக்கியதில் குமாரபாளையம் ஆய்வாளர் தவமணி, உதவியாளர் ரஞ்சித் குமார் ஆகியோர் படுகாயமடைந்து...
தாய் இல்லாமல் நான் இல்லை… எம்.ஜி.ஆர் பாடல் பாடி அசத்திய மாஜி!
கோயம்பேடு அருகே அதிமுக சார்பில் நடைபெற்ற முதியோர் தின விழாவில் முன்னாள் அமைச்சர் பா.பெஞ்சமின் கலந்துகொண்டு ஆயிரம் முதியோர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். சென்னை கோயம்பேடு அடுத்த நெற்குன்றத்தில் அம்மா அறக்கட்டளை சார்பாக முதியோர்கள் தினம் கொண்டாடப்பட்டது. நெற்குன்றம் 145 ஆவது வார்டு அதிமுக கவுன்சிலர் சத்தியநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் முன்னாள் அதிமுக அமைச்சர் பா.பெஞ்சமின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது முதியோர் தினத்தை முதியோர்களுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடிய அவர், ஆயிரம்...
அமைச்சர் அன்பில் மகேஷ் திடீர் மருத்துவமனையில் அனுமதி
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வயிற்றுவலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வாலாஜாபாத், காஞ்சிபுரம், உத்திரமேரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகளில் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். பள்ளி கட்டிடங்கள் குறித்தும் நூலகங்கள் குறித்தும் கேட்டறிந்து நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து ஆலோசனைகளை வழங்கினார். மேலும் பள்ளி மாணவ, மாணவிகளின் இடைநிற்றல் குறித்து...
அக்.8ல் தமிழக அமைச்சரவைக் கூட்டம் – முக்கிய முடிவுகள் குறித்து ஆலோசனை
தமிழக அமைச்சரவைக் கூட்டம் அக்.8ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய அமைச்சரவை கடந்த செப்.28ம் தேதி மாற்றி அமைக்கப்பட்டது. அதன்படி, துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் தேர்வாகியுள்ளார். மேலும் புதிய அமைச்சரவையில் கோவி.செழியன், செந்தில் பாலாஜி , ராஜேந்திரன் மற்றும் நாசர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், ராமச்சந்திரன் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும், அமைச்சர்கள் பொன்முடி, கயல்விழி செல்வராஜ், மதிவேந்தன் உள்ளிட்ட6 பேர்...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பூரண நலம் பெற வேண்டும் – விஜய்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பூரண பெற வேண்டும் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் நேற்று மாலை ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வயிற்று வலி, சீரற்ற ரத்த ஓட்டம் மற்றும் சிறுநீர் கழிப்பதில் பிரச்னை ஆகியவற்றால் அனுமதிக்கப்பட்டதாகவும் பரிசோதனைகள் அனைத்து மேற்கொள்ளப்பட்டு கூறப்பட்டது. இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் உடல் நிலை சீராக உள்ளதாகவும், 2 நாட்களில் வீடு திரும்புவார் என...
நடிகர் ரஜினிகாந்தின் உடல் நிலை – அறிக்கை வெளியிட்டது மருத்துவமனை
நடிகர் ரஜினிகாந்த் உடல் நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்துக்கு நேற்று மாலை ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வயிற்று வலி, சீரற்ற ரத்த ஓட்டம் மற்றும் சிறுநீர் கழிப்பதில் பிரச்னை ஆகியவற்றால் அனுமதிக்கப்பட்டதாகவும் பரிசோதனைகள் அனைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. ஐசியூ வார்டில் இருந்து இன்று ஜெனரல் வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் உடல் நிலை சீராக உள்ளதாகவும், 2...
கோவையில் எலிக்காய்ச்சலுக்கு சிறுவன் பலி- அலட்சியம் காட்டுகிறதா சுகாதாரத்துறை?
ஈரோடு மாவட்டம், பவானி அருகே உள்ள பருவாச்சி காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் பெரியசாமி- நிர்மலா தம்பதியினர், இவர்களின் இரண்டாவது மகன் தினேஷ்குமார் (13), அருகிலுள்ள அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.தினேஷ்குமாருக்கு கடந்த மாதம் 16ஆம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனை மற்றும் ஈரோடு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அப்போது ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் டெப்த்திரியா பாக்டீரியா கிருமி இருப்பதால் இதற்கான மருந்து அரசு...









