உயர்நீதிமன்ற உத்தரவை மீறி மனிதர்களை சாக்கடை நிறைந்த கால்வாயில் இறக்கி, எந்தவித பாதுகாப்பு உபகரணமும் இன்றி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தி வரும் சென்னை மாநகராட்சி அதிகாரிகளின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் கால்வாய்களை சுத்தம் செய்யும் பணியில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னை மாநகராட்சி 15-வது மண்டலத்துக்குட்பட்ட சோழிங்கநல்லூர் – மேடவாக்கம் செல்லும் செம்மொழி பிரதான சாலையில் உள்ள தனியார் கல்லூரி எதிரே கால்வாயில்...
Author: Source Author
‘ரஜினிகாந்த் நலம் பெற வேண்டும்’- மனமுருகி வேண்டிய மகள் செளந்தர்யா
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு கடந்த 10 நாட்களுக்கு மேலாக உடல்நல பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவருக்கு சிறுநீர் கழிப்பதில் பிரச்னை இருந்து வந்ததாகவும், ரத்த நாளத்தில் வீக்கம் ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இதைத்தொடர்ந்து மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அறுவை சிகிச்சை இன்றி ரத்த நாளத்தில் ஸ்டென்ட் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, மருத்துவக்குழுவின் தீவிர மருத்துவ கண்காணிப்பில்...
மதுவிலக்கு மாநாடு இதுக்குதான்.. நோக்கத்தை சிதைத்து விட்டார்கள் -திருமாவளவன் ஆதங்கம்
விசிகவின் மதுவிலக்கு மாநாட்டின் உயர்ந்த நோக்கத்தை சிதைத்து விட்டார்கள் என திருமாவளவன் ஆதங்கம் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சியில் விசிக சார்பில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் நடந்த மதுவிலக்கு மகளிர் மாநாட்டில் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டுவர வேண்டும், தேசிய மது விலக்கு கொள்கையை அமல்படுத்த வேண்டும் உள்பட 13 தீர்மானங்களை நிறைவேற்றப்பட்டது. இந்த மாநாட்டில் திமுக, காங்கிரஸ், தவாக, மமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் பேசிய திருமாவளவன் எம்.பி.,...
விசிக நடத்திய மது ஒழிப்பு மகளிர் மாநாட்டில் 13 தீர்மானங்கள் நிறைவேற்றம்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தலைமையிலான மது ஒழிப்பு மகளிர் மாநாடு இன்று திண்டிவனத்தில் நடைபெற்றது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சிமட்டுமின்றி வேறு பல கட்சியினைச் சேர்ந்தோரும் இந்த மாநாட்டி பங்கு பெற்றனர். இந்த மாநாட்டில் மது ஒழிப்பு தொடர்பான 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றை தொல்.திருமாவளவன் வாசித்தார். நிறைவேற்றப்பட்ட 13 தீர்மானங்கள் 1) மதுவிலக்கை தேசிய கொள்கையாக அறிவிக்க வேண்டும். 2) மதுவிலக்கை அமல்படுத்தும் மாநில அரசுக்கு மத்திய அரசு சிறப்பு நிதி அளிக்க வேண்டும்....
யாரும் உழைப்பதற்கு தயாராக இல்லை – கிராம சபை கூட்டத்தில் ஆதங்கப்பட்ட அமைச்சர்
இப்பொழுது யாரும் உழைப்பதற்கு தயாராக இல்லை என கிராம சபை கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே மேலபட்டமங்களம் ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டார். பின்னர் பொதுமக்களிடையே பேசிய அவர், “இன்றைக்கு கிராமங்களில் அடிப்படை வசதிகள் நிரம்பி இருக்கிற ஒரே மாநிலம் தமிழ்நாடுதான் என்றார். ஒரு ஊராட்சியில் இருந்து 4 லட்சம் ரூபாய் மட்டும்தான் அரசாங்கத்திற்கு...
ரூ.10 லட்சம் லஞ்சம் கேட்டு மிரட்டல் – திமுக கவுன்சிலர் மீது புகார்
குடிநீர் மற்றும் கழிவுநீர் ஓப்பந்த பணிகளை மேற்கொண்டு வரும் ஒப்பந்ததாரிடம் ரூ.10 லட்சம் லஞ்சம் கேட்டு மிரட்டல் விடுத்த திமுக கவுன்சிலர் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலை விஜிபி அமுதா நகர் கூவம் நதிக்கரை ஓரம் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் சென்னை குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் கழிவுநீர் நிர்வாகம் சார்பாக கழிவுநீர் இணைப்புக் குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. 56 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் இந்த பணிகளை நாகராஜன் கன்ஸ்ட்ரக்ஷன் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த நாகராஜன் ஓப்பந்த அடிப்படையில் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த...
ஏடிஎம் கொள்ளை கும்பலை பிடித்தது தமிழக காவல்துறைக்கு பெருமை – டிஜிபி பாராட்டு
கேரள மாநிலம், திருச்சூரில் கடந்த 27ம் தேதி மூன்று ஏடிஎம்களில் பணத்தை கொள்ளையடித்து, தமிழகம் நோக்கி வந்த ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த கொள்ளைக் கும்பலை நாமக்கல் மாவட்ட காவல்துறையினர் வெப்படை அருகே சுற்றி வளைத்து பிடித்தனர். இந்த சம்பவத்தில் கொள்ளை கும்பலைச் சேர்ந்த ஜுமாந்தின் என்பவர் சுட்டு கொல்லப்பட்டார். அசார் அலி என்ற மற்றொரு கொள்ளையன் பலத்த காயமடைந்தார். ஐந்து பேர் பிடிபட்டனர். கொள்ளையர்கள் தாக்கியதில் குமாரபாளையம் ஆய்வாளர் தவமணி, உதவியாளர் ரஞ்சித் குமார் ஆகியோர் படுகாயமடைந்து...
தாய் இல்லாமல் நான் இல்லை… எம்.ஜி.ஆர் பாடல் பாடி அசத்திய மாஜி!
கோயம்பேடு அருகே அதிமுக சார்பில் நடைபெற்ற முதியோர் தின விழாவில் முன்னாள் அமைச்சர் பா.பெஞ்சமின் கலந்துகொண்டு ஆயிரம் முதியோர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். சென்னை கோயம்பேடு அடுத்த நெற்குன்றத்தில் அம்மா அறக்கட்டளை சார்பாக முதியோர்கள் தினம் கொண்டாடப்பட்டது. நெற்குன்றம் 145 ஆவது வார்டு அதிமுக கவுன்சிலர் சத்தியநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் முன்னாள் அதிமுக அமைச்சர் பா.பெஞ்சமின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது முதியோர் தினத்தை முதியோர்களுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடிய அவர், ஆயிரம்...
அமைச்சர் அன்பில் மகேஷ் திடீர் மருத்துவமனையில் அனுமதி
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வயிற்றுவலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வாலாஜாபாத், காஞ்சிபுரம், உத்திரமேரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகளில் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். பள்ளி கட்டிடங்கள் குறித்தும் நூலகங்கள் குறித்தும் கேட்டறிந்து நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து ஆலோசனைகளை வழங்கினார். மேலும் பள்ளி மாணவ, மாணவிகளின் இடைநிற்றல் குறித்து...
அக்.8ல் தமிழக அமைச்சரவைக் கூட்டம் – முக்கிய முடிவுகள் குறித்து ஆலோசனை
தமிழக அமைச்சரவைக் கூட்டம் அக்.8ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய அமைச்சரவை கடந்த செப்.28ம் தேதி மாற்றி அமைக்கப்பட்டது. அதன்படி, துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் தேர்வாகியுள்ளார். மேலும் புதிய அமைச்சரவையில் கோவி.செழியன், செந்தில் பாலாஜி , ராஜேந்திரன் மற்றும் நாசர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், ராமச்சந்திரன் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும், அமைச்சர்கள் பொன்முடி, கயல்விழி செல்வராஜ், மதிவேந்தன் உள்ளிட்ட6 பேர்...










