சென்னையில் ரூட் தல விவகாரத்தில் மாணவர்கள் மோதலில் ஈடுபட்டால் 10 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கும் வகையில் புதிய பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே போலீசார் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளனர். நடிகர்கள் வினித்- அப்பாஸ் நடித்து படமாக வெளியான காதல் தேசம். 90-களிலேயே கல்லூரி மாணவர்களிடையே நடக்கும் மோதல்கள் குறித்து விரிவாக இந்த படத்தில் காண்பிக்கப்பட்டது. 28 ஆண்டுகள் ஆகியும் சென்னையில் கல்லூரி மாணவர்கள் இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி...
Author: Source Author
விமான சாகச நிகழ்ச்சி: 5 பேர் உயிரிழப்புக்கு இது தான் காரணமா?- வெளியானது முதற்கட்ட விசாரணை
சென்னையில் நடந்த விமான சாகச நிகழ்ச்சியின்போது 5 பேர் உயிரிழப்பு குறித்த தகவல் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்திய விமானப்படையின் 92-வது ஆண்டு விழாவை முன்னிட்டு விமான சாகச நிகழ்ச்சியானது கடந்த 6-ம் தேதி சென்னை மெரினா கடற்பரப்பில் நடைபெற்றது. சுமார் 15 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் கலந்து கொண்டதாகவும் “லிம்கா உலக சாதனை புத்தகத்தில்” இந்த நிகழ்ச்சி இடம் பிடித்து “புதிய உலக சாதனை” படைத்ததாகவும் இந்திய விமானப்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நண்பகல்...
சாம்சங் தொழிலாளர்களுக்கு திமுக செய்தது பெருந்துரோகம் – கொதித்தெழுந்த ராமதாஸ்
தொழிலாளர்களின் நலன்களை அடகு வைத்து விட்டு,பன்னாட்டு நிறுவனங்களின் முகவராக செயல்படுகிறது திராவிட மாடல் அரசு என திமுக ராமதாஸ் கடுமையாக சாடி உள்ளார். இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகில் செயல்படும் சாம்சங் தொழிற்சாலையில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு, 8 மணி நேர வேலை, தொழிற்சங்க உரிமை உள்ளிட்ட 8 கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் மேற்கொண்டு வந்த நிலையில், தமிழக அமைச்சர்கள் முன்னிலையில் நேற்று...
பாஜகவுடன் அதிமுக மீண்டும் கூட்டணி?- முன்னாள் அமைச்சர் சொன்ன பதில்
அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை. நிரந்தர நண்பரும் இல்லை. எது வேண்டுமானாலும் நடக்கலாம். ஜோசியம் கூற முடியாது என அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். திமுக அரசை கண்டித்தும், உயர்த்தப்பட்ட சொத்து வரியை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான திண்டுக்கல்லில் சீனிவாசன் கலந்து கொண்டார். மனித சங்கிலி போராட்டம் பெரியார் சிலையிலிருந்து...
”உதயநிதி டி-ஷர்ட் அணிந்து வருகிறார்..கட்சியினர் அணிந்து வந்தால் ஒப்புக்கொள்வாரா?”
சொத்து வரி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்தி வருவதை கண்டித்து அதிமுக சார்பில் சென்னை ராயபுரத்தில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த மனித சங்கிலி போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு தற்பொழுது செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “வான் சாகச நிகழ்ச்சியில் பாதுகாப்பு குறைபாடுகளை ஏற்றுக்கொள்ளாமல், சோற்றில் முழு பூசணிக்காயை வைத்து மறைக்கும் முயற்சியில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டு வருகிறது. வான் சாகச நிகழ்ச்சியில் ஆம்புலன்ஸ் வசதியோ, குடிநீர்...
14 மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. முழு விவரம் இதோ!
தமிழ்நாட்டில் மாவட்ட வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்திடவும் மற்றும் இதர பணிகளைக் கண்காணித்திடவும் மாவட்டங்களுக்குப் பொறுப்பு அமைச்சர்கள் நியமித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் மாவட்ட வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்தவும், பொது மக்களுக்குச் சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளைக் கண்காணிக்கவும், இயற்கைச் சீற்றம், நோய்த்தொற்று இன்னபிற நேரங்களில் அவசரகாலப் பணிகளைக் கூடுதலாக மேற்கொள்ளவும் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் சிலரை, சில மாவட்டங்களுக்குப் பொறுப்பு அமைச்சர்களாக நியமித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள். அதன்படி....
துணை முதல்வர்.. புதிய அமைச்சர்கள்.. தொடங்கியது தமிழக அமைச்சரவை கூட்டம்..
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11 மணிக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது தமிழ்நாடு அமைச்சரவை மாற்றியமைக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்படுவதாகவும், செந்தில்பாலாஜி, ஆவடி நாசர், கோ.வி.செழியன் மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர். மேலும், செஞ்சி மஸ்தான், மனோ தங்கராஜ் மற்றும் கே.ராமசந்திரன் அமைச்சவையில் இருந்து நீக்கப்பட்டு, பொன்முடி, கயல்விழி செல்வராஜ், மெய்யநாதன், மதிவேந்தன் மற்றும் ராஜகண்ணப்பன் ஆகியோரின் துறைகளும் மாற்றி மாற்றியமைக்கப்பட்டது. இந்நிலையில், புதிதாக...
"கலைஞர் நூற்றாண்டு பூங்கா நுழைவுக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும்!"
கலைஞர் நூற்றாண்டு பூங்காவுக்கான நுழைவு கட்டணத்தை குறைக்குமாறு வலியுறுத்தியுள்ளார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்னை, கதீட்ரல் சாலையில் தோட்டக்கலைத் துறையின் 6.09 ஏக்கர் நிலத்தில் 46 கோடி ரூபாய் செலவில் தோட்டக்கலை அருங்காட்சியகம் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ள உலகத்தரத்திலான கலைஞர் நூற்றாண்டு பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (அக்.8) திறந்து வைத்தார். தமிழ்நாட்டின் இயற்கை ஞழலை பாதுகாத்திடவும். வனப்பரப்பை அதிகப்படுத்தும் நோக்கிலும், 2 கோடியே 80 லட்சம்...
2026 பேரவைத் தேர்தலுக்கு முதல் ஆளாக களத்தில் இறங்கிய திமுக..வெளியான லிஸ்ட்!
234 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், வாக்காளர் பெயர் சேர்ப்பு, நீக்கம் உள்ளிட்ட பணிகளை மேற்பார்வையிட திமுக தொகுதி பார்வையாளர்களை நியமித்துள்ளது. அண்மையில் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. இதையடுத்து வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க திமுக முனைப்பாக உள்ளது. இதற்காக மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற கையோடு சட்டப்பேரவை தேர்தலுக்கான ஒருங்கிணைப்புக் குழுவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைத்தார்....
வான் சாகச நிகழ்ச்சியில் சோகம்: ‘ஏதோ துரதிஷ்டம்..’ – ஆர்.எஸ்.பாரதி
வான் சாகச நிகழ்ச்சியில் நடந்த அசம்பாவிதம் ஏதோ துரதிஷ்டவசமாக நிகழ்ந்து விட்டது. இதை வைத்து அரசியல் செய்வது சரியல்ல என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி தலித் கிறிஸ்தவர் விடுதலை இயக்கம் மற்றும் சிறுபான்மையினர் மக்கள் மன்றம் சார்பில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பெர்னாண்டஸ் ரத்தினராஜாவுக்கு பாராட்டு விழா மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கும் விழா சென்னை புரசைவாக்கத்தில்...










