கனமழை பெய்ததால் வீட்டில் மழை நீர் புகுந்ததால் மேல் தளத்தில் உள்ள அறையில் தங்கிய போது 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது. சென்னையை சேர்ந்த 11 வயது சிறுமி ஆறாம் வகுப்பு படித்து வரும் நிலையில், கடந்த 15ஆம் தேதி கனமழையின் காரணமாக சிறுமியின் வீட்டில் தண்ணீர் புகுந்துள்ளது. சிறுமியின் தந்தை வீட்டின் உரிமையாளரிடம் கேட்டபோது மேலே உள்ள அறையில் தாங்கிக் கொள்ளுமாறு தெரிவித்ததன் பேரில் மேலே உள்ள அறையை சிறுமியின்...
Author: Source Author
கவரப்பேட்டை ரயில் விபத்து வழக்கு..ரயிலை கவிழ்க்க சதி.. புதிய சட்டப்பிரிவு சேர்ப்பு
கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பான வழக்கில் ரயிலை கவிழ்க்க சதி என்ற சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு; லூப் லைன் சந்திப்பில் போல்ட், நட்டு கழற்றப்பட்டதே விபத்துக்கு காரணம் என கண்டுபிடிப்பு சென்னை: நேற்றிரவு கவரப்பேட்டையில் நடைபெற்ற ரயில் விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து புறப்பட்ட பாக்மதி எஸ்பிரஸ் ரயில், சென்னை வழியாக பீகார் மாநிலம் தர்பங்காவுக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை ரயில் நிலையத்தில், லூப் லைனில்...
தீபாவளிக்காக அடுத்தடுத்த ஸ்பெஷல் அறிவிப்புகளை வெளியிடும் அரசு.. தற்போது வந்துள்ள இனிப்பு செய்தி என்ன தெரியுமா?
தீபாவளி நெருங்கிக்கொண்டிருப்பதால் ஜவுளி கடைகளிலும், பட்டாசுக் கடைகளிலும் பொதுமக்களின் சிரமமின்றி செல்ல, முக்கிய கடைவீதிகளுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகைகளில் தீபாவளியும் ஒன்று. கிருஷ்ண பெருமான் நரகாசுரனை வதம் செய்யும் நாளே தீபாவளி பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. தீபாவளி திருநாளன்று அதிகாலையிலேயே எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடைகள் அணிந்து கடவுளை வழிபடுவது வழக்கம். இதனையடுத்து குழந்தைகள் முதல் பெரியோர் வரை பட்டாசுகள் வெடித்தும், விதவிதமான பலகாரங்கள் சாப்பிட்டும் அந்நாளை...
கல்வியில் தமிழ்நாட்டை சிங்கப்பூருடன் ஒப்பிட வேண்டும் – அமைச்சர் கோவி.செழியன்
170 ஆண்டு கால பழமையான கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரி தென்னிந்தியாவின் கேம்பிரிட்ஜ் என போற்றப்படுகிறது, இக்கல்லூரியின் பட்டமேற்பு விழாவில் கல்லூரி முதல்வர் மாதவி வரவேற்புரை நிகழ்த்த, கல்லூரி பழைய மாணவரான, தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் 2021 – 2022ம் ஆண்டு தேர்ச்சி பெற்ற 1,487 மாணவ மாணவியர்களுக்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்று பட்டம் வழங்க வந்திருந்தார். நிகழ்ச்சிக்கு வர ஒன்றரை மணி நேரம் தாமதமான நிலையில் அதற்கு வருத்தம் தெரிவித்து சிறப்புரையாற்றினார். அமைச்சர் தனது...
தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க வேண்டி வழக்கு
மதுரையைச் சேர்ந்த ரமேஷ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கு ஒன்றினைத் தாக்கல் செய்துள்ளார். அதில், இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் நிகழ்வுகள் தினமும் நடைபெறுகிறது. ஆகவே, இந்தியக் கடற்படைக் கப்பல், எல்லைக் கோட்டில் இருந்து, இந்திய மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்க இடைக்கால உத்தரவிட வேண்டும். மேலும், இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கொல்லப்படுவதையும், வலைகளைப் பறித்து, கைது செய்வதையும் தடுக்கும் வகையில் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த அறிவுறுத்த வேண்டும்” எனக் கூறியிருந்தார். இந்த...
தாயின் கண்முன்னே மகளை இழுத்து சென்ற சிறுத்தை… பரிதாபமாக உயிரிழந்த 6 வயது சிறுமி!
கோவை மாவட்டம் வால்பாறை அருகே ஊசிமலை எஸ்டேட் பகுதிக்கு ஜார்கண்ட் மாநிலத்தில் கோன்டா என்ற பகுதியில் இருந்து தேயிலை பறிக்கும் வேலைக்காக அனுல் அன்சாரி என்பவர், தனது இரண்டு மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் வந்து வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று ஊசிமலை எஸ்டேட் பகுதியில் ஒருவர் இயற்கை மரணம் அடைந்த நிலையில் அனைவரும் வீட்டில் இருந்து உள்ளனர். அணுல் அன்சாரி மற்றும் நசிரென் காத்துன் மற்றும் 6 வயது குழந்தை அப்சரா காத்துன் தேயிலை...
200 கிலோ கஞ்சாவை கடத்த முயற்சி… அலேக்காக தூக்கிய போலீசார்!
தமிழகத்தில் போதைப்பொருள் பரவலைக் கட்டுப்படுத்த EBCID, தமிழ்நாடு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. முக்கிய சோதனை நடத்தப்பட்டதில் 17 அக்டோபர் 2024 அன்று மத்திய நுண்ணறிவு பிரிவு சென்னை ரேஞ்ச் இன்ஸ்பெக்டர் அன்பரசி மற்றும் அவரது குழுவினர் மாநிலங்களுக்கு இடையேயான 4 கஞ்சா கடத்தல்காரர்களை பிடித்தனர். சுமார் ரூ.20,00,000/- மதிப்புள்ள 200 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மினி லோட் கேரியரான Force Trax பதிவு எண் AP 39 UH 5461 மற்றும் பதிவு எண்...
தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு
இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகையான தீபாவளிப் பண்டிகை இந்த ஆண்டு அக்டோபர் 31ம் தேதி கொண்டாடப்படவிருக்கிறது. அக்டோபர் 31ம் தேதி வியாழக்கிழமை என்பதால் வெள்ளிக்கிழமையும் விடுமுறை கிடைத்தால் அதனோடு சேர்ந்து சனி, ஞாயிறு என மொத்தம் நான்கு நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பில் மக்கள் அனைவரும் இருந்தனர். இந்நிலையில் பலரது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதைப் போன்று தமிழக அரசு தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், தீபாவளியையொட்டி சொந்த ஊர்களுக்குச்...
”இந்தி மாதம் கொண்டாடப்படுவது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல..” – டிடிவி தினகரன்!
தூர்தர்ஷன் தமிழ் எனப்படும் சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தில் இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழாவும், சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்களும் இன்று மாலை நடைபெறும் என்றும், அந்நிகழ்ச்சிகளில் தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான இந்தி திணிப்பு என்று தமிழ்நாட்டின் ஆளும் கட்சித் தொடங்கி எதிர்க்கட்சிகள் வரை உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்...
ரத்தம் சொட்ட சொட்ட சித்ரவதை செய்யப்பட்ட நீட் மாணவர்கள்… சிசிடிவியில் பகீர்!
நாடு முழுவதும் மருத்துவ படிப்பு சேருவதற்கு நீட் தேர்வு கட்டாயமாக்கபட்டதை தொடர்ந்து நீட் தேர்வு தேர்ச்சி பெறுவதற்காக 12-ம் வகுப்பு முடித்த மாணவர்களும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களும் நீட் பயிற்சி மையங்களை நோக்கி படையெடுக்கும் நிலை தற்போது அதிகரித்துள்ளது குறிப்பாக, தமிழகத்தில் எப்படியாவது மருத்துவராகி விட வேண்டும் என்பதற்காக நடுத்தர வர்க்க முதல் வசதி படைத்தவர்கள் என அனைவரும் தங்கள் பிள்ளைகளை கடன் வாங்கியாவது பயிற்சி மையங்களுக்கு அனுப்பி படிக்க வைக்கும் நிலை தற்போது உருவாகியுள்ளது....










