தங்கலான் படத்தை ஓடிடியில் வெளியிட தடையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூரை சேர்ந்த பொற்கொடி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான தங்கலான் படத்தில் வைணவர்களை அவமதிக்கும் வகையில் காட்சிகள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. புத்த மதம் குறித்து புனிதமான முறையிலும் வைணவத்தை நகைச்சுவையாக சித்தரிக்கும் வகையில் காட்சிகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே படம் திரையரங்குகளில் வெளியான நிலையில் விரைவில்...
Author: Source Author
நீட் பயிற்சி மையத்தில் மாணவர்கள் மீது தாக்குதல் – அவசரமாக விடுதியை காலி செய்ததால் பரபரப்பு
நெல்லையில் செயல்பட்டு வந்த ஜெல் நீட் அகாடமியின் ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கும் விடுதியை அவசர அவசரமாக காலி செய்யப்பட்டது. நெல்லையில் இயங்கி வந்த ஜல் நீட அகாடமியில் மாணவ மாணவிகள் கடுமையாக தாக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதுகுறித்து சமூக நலத்துறை தரப்பில் விசாரணை மேற்கொண்டதில்அங்கு செயல்பட்டு வந்த ஆண் பெண் இருபாலருக்கான விடுதிகள் எந்தவிதமான ஒப்புதலும் இன்றியும் போதிய உட்கட்டமைப்புகள் வசதிகள் இன்றியும் இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ...
கோவையில் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக புகைப்படம் – பாய்ந்தது வழக்கு
கோவையில் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவு படத்தை வாட்ஸ்அப் புரோஃபைலில் வைத்திருந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை, குனியமுத்தூர் முத்துசாமி சேர்வை தெருவைச் சேர்ந்த ஷேக் சபியுல்லா (41) என்பவர் மீது ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவான படத்தை வாட்ஸ்அப் புரோஃபைலில் வைத்து இருந்ததற்காக போலீசார் வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.கோவை நகர போலீஸின் உளவுப் பிரிவு அதிகாரிகள் சமூக வலைதளங்களை கண்காணித்து வந்த நிலையில், சபியுல்லாவின் வாட்ஸ்அப் புரோஃபைல் படம் தீவிரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ் க்கு ஆதரவாக...
எதிர்திசையில் வந்தவருக்கு வழி விட்டதால் வந்த வினை-மாணவிக்கு சேர்ந்த சோகம்
ஈசிஆர் அருகே போக்குவரத்து விதிமுறையை மீறி எதிர் திசையில் வந்த வாகனத்திற்கு வழி விட்டதால் கழிவுநீர் லாரியில் சிக்கி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை செம்மஞ்சேரியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்த கேத்தரின் சென்ற மாணவியும், அவரது ஆண் நண்பரும் இருசக்கர வாகனத்தில் ஈசிஆர் சாலையில் சென்று கொண்டிருந்தனர்.பக்கிங்காம் கால்வாய் மேம்பாலம் மீது சென்றபோது எதிர் திசையில் வந்த இருசக்கர வாகனத்திற்கு வழி விடுவதற்காக வலது பக்கத்தில் சிறிது நகர்ந்தபோது பின்னால்...
நான் சொன்னா சொன்னதுதான்…. மன்னிப்பு கேட்க முடியாது.. – உதயநிதி ஸ்டாலின் காட்டம்!
திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆண்டி அம்பலம் இல்ல திருமண விழாவில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். நிகழ்வில் தமிழக ஊரக வளர்ச்சிதுறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவு துறை அமைச்சர் அர.சக்கரபாணி, பத்திரப்பதிவு துறை அமைச்சர் பி.மூர்த்தி, திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் , பழனி தொகுதி எம்எல்ஏ ஐ.பி செந்தில்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். அப்போது மேடையில் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில்,...
மீண்டும் சர்ச்சையில் சிக்கிய இர்பான் – குழந்தைப் பிறப்பை வீடியோ எடுத்ததால் சிக்கல்
குழந்தைப் பிறப்பை வீடியோ எடுத்து தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்ட விவகாரத்தால் மீண்டும் இர்பான் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். பிரபல யூடியூபர் இர்பான் தனது யூடியூப் சேனலில் உணவு சார்ந்து பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். மேலும் தனது வீட்டில் நடக்கும் விஷேசங்களையும் வீடியோவாக பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இர்பான் சென்ற கார் மோதி முதியவர் ஒருவர் உயிரிழந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் தான் காரை இயக்கவில்லை...
ஏரியில் தத்தளித்த இருவரை காப்பாற்ற இறங்கிய பெண் – 3 பேருக்கு நேர்ந்த சோகம்
மேட்டூர் அருகே நங்கவள்ளி ஏரியில் துணி துவைக்க சென்ற 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், நங்கவள்ளி வீரக்கல் பகுதியை சேர்ந்த சிவலிங்கம் என்பவரது மகள்கள் ரேவதி, திவ்யதர்ஷினி மற்றும் மகன் சிவஸ்ரீ துணி துவைப்பதற்காக கொத்தி குட்டை ஏரிக்கு சென்றுள்ளனர். அப்போது சிவஸ்ரீ மற்றும் திவ்யதர்ஷினி நீச்சல் தெரியாமல் குளத்தில் இறங்கியபோது, ஆழமான பகுதியில் சிக்கி நீரில் மூழ்கினர். இதனை பார்த்த ரேவதி இருவரையும் காப்பாற்ற முயன்றுள்ளார். இதில்...
“உதயநிதியை இங்கே கூப்பிடவா?”-போலீசாரை இழிவாக பேசி மிரட்டிய தம்பதியால் பரபரப்பு
சென்னை மெரினா கடற்கரை லூப் சாலையில் நள்ளிரவில் நிறுத்தப்பட்ட காரை எடுக்கும்படி கூறிய ரோந்து போலீசாரை இழிவாக பேசிய தம்பதியால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை மெரினா கடற்கரை லூப் சாலையில் மயிலாப்பூர் போலீசார் நேற்றிரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது சாலையில் நிறுத்தட்டு இருந்த காரை எடுக்கும்படி போலீசார் காருக்குள் இருந்த தம்பதியிடம் கேட்டதாக கூறப்படுகிறது.ஆனால் ரோந்து போலீசார் மிக இழிவாக பேசி தம்பதி அநாகரீகமாக நடந்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.இதனை போலீசார் வீடியோ பதிவு...
India needs to hike domestic fertiliser output to offset unstable market: Economist
Senior Economist of the Food and Agriculture Organization (FAO) of the United Nations, Nicholas Sitko, said India has to increase its own fertiliser production capacity as the situation in Ukraine and West Asia is likely to remain unstable. Dr. Sitko, who was in New Delhi in connection with a discussion on FAO’s report ‘The Unjust...
இரவோடு இரவாக தமிழக வெற்றிக் கழகத்தின் பேனர் கிழிப்பு
நடிகர் விஜய் தொடங்கியிருக்கும் அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வரும் 27ம் தேதி விக்கிரவாண்டி அருகே வி.சாலையில் நடைபெறவிருக்கிறது. இந்த மாநாட்டில்தான் விஜயின் அரசியல் எது சார்ந்தது, அக்கட்சியின் கொள்கைகள் என்ன என்பது பற்றியெல்லாம் தெரியப் போகிறது. மேலும், விஜய் அரசியல் களத்தில் வெற்றி பெறுவாரா என்பதைக் கூட அடிப்படையாகத் தீர்மானிக்கும் அளவுக்கு இந்த மாநாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. இம்மாநாட்டுக்கு தமிழகம் முழுவதிலுமுள்ள தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் வருகை...









