தவெக மாநாட்டிற்கு செல்லும்வழியில் இரு இளைஞர்கள் விபத்தில் சிக்கினர். அதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி. மற்றொருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை சென்ட்ரல் மூர் மார்க்கெட் பகுதியில் இருந்து இரு சக்கர வாகனத்தில் இளைஞர்கள் இருவர் தேனாம்பேட்டை டிஎம்எஸ் மெட்ரோ ரயில் நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்பொழுது எதிர்திசையில் எம் சாண்ட் மணலுடன் லாரி ஒன்று வந்துள்ளது. அப்பொழுது டிஎம்எஸ் ரயில் நிலையம் அருகே திரும்பியபோது எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகனம் மீது...
Author: Source Author
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றச்சாட்டு…நாகை மீனவர்களை கூண்டோடு பிடித்துச்சென்ற இலங்கை கடற்படை
நாகையைச் சேர்ந்த மீனவர்கள் 12 பேரை நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படை சிறைபிடித்தனர். நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் பருத்தித்துறை வடகிழக்கு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து நெடுந்தீவு அருகே சென்ற போது, அங்கு ரோந்துப் பணிக்காக சென்ற இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 12 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணைக்காக காங்கேசன் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. நாகை அக்கரைப்பேட்டையை சேர்ந்த சிலம்பு செல்வன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மீனவர்கள் சென்றதாக...
தமிழக வெற்றிக் கழக மாநாடு – காலை முதலே குவியும் ரசிகர்கள்
விழுப்புரம் மாவட்டம் விக்ரவாண்டி அருகே விஜய் தலைமையில் நடைபெறும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காலைமுதலே பல்வேறு மாவட்டங்களில் இருந்து தொண்டர்கள், ரசிகர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக உள்ள நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கினார். இதையடுத்து கட்சியின் முதல் மாநாட்டை அறிவித்தார். அதன்படி, அந்த மாநாடு கொள்கை விளக்கத் திருவிழா என்று பெயரில் விழுப்புரம் மாவட்டம்...
ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்: பாஜக எம்.பிக்கு தொடர்பு..? விசாரணையில் கிடைத்த பகீர் தகவல்கள்
தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், ஹவாலா இடைத்தரகர் தங்கக் கட்டிகளை விற்று பணம் கொடுத்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக, தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் தற்போது விசாரணை தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில், ஹவாலா இடைத்தரகர்கள் பங்கஜ், சூரஜ் ஆகியோரிடம் சிபிசிஐடி போலீசார் நேற்று 11 மணி நேரம் விசாரணை...
தவெக மாநாடு – இறுதி கட்ட பணிகள் தீவிரம்
தமிழக வெற்றிக் கழக மாநாடு திடலில் இறுதி கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு கொள்கை விழக்க திருவிழா, விழுப்புரம் மாவட்டம் விக்ரவாண்டியில் உள்ள வி.சாலையில் நாளை நடைபெற உள்ளது. விஜய் எந்த மாதிரியான அரசியலை முன்னெடுக்கப்போகிறார் என பலரும் கேள்விகளை அவரை நோக்கி வீசி வந்த சூழலில், மாநாட்டு திடலில் இடம் பெற்றுள்ள கட்-அவுட்கள் பலரையும் ஈர்த்து வருகிறது. மேடையின் இடது புறத்தில் பெரியார், காமராஜர், அம்பேத்கர், சுதந்திரப் போராட்ட...
தவெக மாநாட்டுக்கு போறீங்களா? அப்போ கட்சி தலைவர் விஜய் சொன்ன இந்த மெசேஜ் உங்களுக்குதான்!
தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு வருகை தரும் அனைவரும் பயண பாதுகாப்பில் மிகக் கவனமாக இருக்க வேண்டுமென தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நாளை விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே வி.சாலையில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், மாநாட்டுப் பயணப் பாதுகாப்பில் தாங்கள் அனைவரும் மிகக் கவனமாக இருக்க வேண்டும் எனவும், இருசக்கர வாகனப் பயணத்தை தவிர்க்க வேண்டும் எனவும்...
தவறாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து: பதவி விலகுவாரா உதயநிதி ஸ்டாலின்..?- எல்.முருகன் கேள்வி
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியில் தவறாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து குறித்து என்ன பதில் சொல்லப்போகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..? என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமிழக அரசு அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டுள்ளது.இதையடுத்து முதலில் இருந்து மீண்டும்...
பயணி தாக்கியதால் நடத்துநர் உயிரிழப்பு-ரூ.10 லட்சம் நிதியுதவி அறிவித்த முதலமைச்சர்
பயணி தாக்கியதில் உயிரிழந்த அரசு பேருந்து நடத்துநரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்துவந்த சுப்பையா (வயது 57) என்பவர் கடந்த 21ம் தேதி பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று (அக்.25ம்...
மெரினாவில் அவதூறு பேச்சு: ஜாமின் கோரி மனு -காவல்துறை பதிலளிக்க உத்தரவு
சென்னை மெரினாவில் போலீசாரை அநாகரீகமாக பேசிய சந்திர மோகன் என்பவர் ஜாமின் கோரிய மனு குறித்து காவல்துறை பதிலளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மெரினா லூப் சாலையில் நின்று கொண்டிருந்த நான்கு சக்கர வாகனத்தை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் எடுக்குமாறு கூறியபோது, சந்திர மோகனும் அவரது தோழி தனலெட்சுமியும் காவல் துறையினரை ஆபாசமாக திட்டினர். இதையடுத்து, மயிலாப்பூர் காவல்துறையினர் அளித்த புகாரின் அடிப்படையில், சந்திரமோகன் மற்றும் அவரது தோழி மீது ஆபாசமாக திட்டுதல்,...
2026 என்ற இலக்கை நோக்கி முதல் அடி – தவெக தலைவர் விஜய்
தவெகவின் மாநாட்டு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மாநாட்டுக்கு வரும் தொண்டர்கள் பாதுகாப்பாக வருவது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். நடிகர் விஜய் கடந்த பிப்ரவரியில் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கினார். அதனைத்தொடர்ந்து டெல்லி உள்ள தேர்தல் ஆணையத்தில் முறையாக பதிவு செய்யப்பட்டது. பின்னர் 6 மாதம் கழித்து தவெகவை அரசியல் கட்சியாக அங்கீகரித்து தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன் பின்னர் தவெக ஆலோசனை கூட்டங்கள், நிர்வாகிகள் தேர்வு என கட்சிப்...










