Author: Source Author

Home Source Author
தீபாவளியையொட்டி சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்.. 2 கி.மீ. போக்குவரத்து பாதிப்பு
Post

தீபாவளியையொட்டி சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்.. 2 கி.மீ. போக்குவரத்து பாதிப்பு

தீபாவளி பண்டிகையையொட்டி சொந்த ஊர்களுக்கு சென்னையில் இருந்து ஏராளமானோர் சென்றதால் தாம்பரம், செங்கல்பட்டு உள்ளிட்ட இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  தீபாவளி பண்டிகை, வார விடுமுறை நாட்கள் என்பதால் தென் மாவட்டத்தை சேர்ந்த பல லட்ச கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் தென்மாவட்டங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இதனால் வண்டலூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, சிங்கபெருமாள்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்க்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கார், வேன், அரசு மற்றும் தனியார்...

தீபாவளி – சொந்த ஊர்களுக்கு செல்ல படையெடுத்த மக்கள்
Post

தீபாவளி – சொந்த ஊர்களுக்கு செல்ல படையெடுத்த மக்கள்

தீபாவளி பண்டிகை கொண்டாட சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு செல்ல கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் குவிந்த மக்கள்,  சிறப்பு பேருந்துகளில் முண்டியடித்து ஏறி பயணம் செய்தனர். தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னையில் தங்கி பணிபுரிந்து வரும் வெளியூர்வாசிகள், தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக  தங்கள் குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். இன்று பேருந்துகள், ரயில்களில் மிகவும் அதிகமான கூட்டம் இருக்கும் என்பதால், நேற்று மாலையில் இருந்தே ஏராளமான மக்கள் சொந்த ஊருக்கு புறப்பட தொடங்கிவிட்டனர்....

ஆம்ஸ்ட்ராங் கொலை; நாகேந்திரன் வாக்குமூலம் வெளியீடு
Post

ஆம்ஸ்ட்ராங் கொலை; நாகேந்திரன் வாக்குமூலம் வெளியீடு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் குற்றப்பத்திரிகையில் நாகேந்திரன் அளித்த வாக்குமூலம் வெளியாகியுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், சென்னை பெரம்பூரில் உள்ள தனது வீட்டின் அருகே, கடந்த ஜூலை 5ம் தேதி கொடூரமாக கொல்லப்பட்டார். இந்நிலையில் வழக்கின் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ள நாகேந்திரன் அளித்த வாக்குமூலம் வெளியாகியுள்ளது. ஐஓசி காண்ட்ராக்டர் ஜெயப்பிரகாஷை துப்பாக்கியை காட்டி மிரட்டிய விவகாரத்தில் தனது மகன் அஸ்வத்தாமன் கைதாக ஆம்ஸ்ட்ராங்தான் காரணம் என்பதால் நாகேந்திரன் ஆத்திரத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அஸ்வத்தாமன்...

20 சதவீத போனஸ்.. அரசு அறிவித்த அடடே அறிவிப்பு..! யாருக்கு தெரியுமா?
Post

20 சதவீத போனஸ்.. அரசு அறிவித்த அடடே அறிவிப்பு..! யாருக்கு தெரியுமா?

தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழக பணியாளர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த ஆண்டு போனஸ் வழங்க அரசு வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்கள் படி நட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு தேயிலை தோட்ட கழக பணியாளர்கள் 10 சதவீத போனஸ் மட்டுமே பெற தகுதியானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   சுற்றுசூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அரசு ரப்பர் கழகம் மற்றும் தமிழ்நாடு...

வங்கிக் கணக்குகள் ஆட்டை…. குறைந்த விலைக்கு கிரிப்டோ காயின்… நூதன மோசடிக் கும்பல் கைது
Post

வங்கிக் கணக்குகள் ஆட்டை…. குறைந்த விலைக்கு கிரிப்டோ காயின்… நூதன மோசடிக் கும்பல் கைது

கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் சென்னை பெருநகர காவல், தெற்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றினை அளித்தார். அந்த புகாரில், தங்களது அலுவலகத்தின் கிளை அலுவலகம் ஒன்று துபாயில் இயங்கி வருவதாகவும்,  அந்த அலுவலகத்திற்கு தேவையான பணத்தை USDT (Crypto Coin) ஆக மாற்றி அனுப்புவது வழக்கம் என்றும் குறிப்பிட்டிருந்தார். இதற்காக, குறைவான விலைக்கு USDT ஆக மாற்றி தருவதாக சிலர் தங்களிடம் ஆசை வார்த்தைகள் கூறி...

சூப்பர் பவர் உள்ளதாக கூறி 4வது மாடியில் இருந்து குதித்த மாணவர்…தயவுசெய்து யாரும் இப்படி பண்ணிடாதீங்க!
Post

சூப்பர் பவர் உள்ளதாக கூறி 4வது மாடியில் இருந்து குதித்த மாணவர்…தயவுசெய்து யாரும் இப்படி பண்ணிடாதீங்க!

கோவையில் சூப்பர் பவர் உள்ளதாக கல்லூரி மாணவர் 4 வது மாடியில் இருந்து குதித்து படுகாயம் – தனியார் மருத்துவமனையில் சிகிச்சை – காவல்துறை விசாரணை செய்து வருகின்றனர். கோவை, மலுமிச்சம்பட்டி அருகே மைலேரிபாளையத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள மாணவர்கள் விடுதியின் 4 – வது மாடியில் இருந்து நேற்று மாலை 19 வயது பிடெக் மாணவரான 19 வயது இளைஞர் குதித்து உள்ளார். அவருக்கு கால் மற்றும் கைகளில் எலும்பு முறிவு...

”இதயங்கள் இடையேயான அன்பின் முன், இன்னல்கள் பெரிதில்லை” – தொண்டர்களுக்கு விஜய் எழுதிய கடிதம்
Post

”இதயங்கள் இடையேயான அன்பின் முன், இன்னல்கள் பெரிதில்லை” – தொண்டர்களுக்கு விஜய் எழுதிய கடிதம்

தவெக முதல் மாநாடு சிறப்பாக நடைபெற்றதையொட்டி தொண்டர்களுக்கு கடிதம் மூலம் நன்றி தெரிவித்துள்ளார் நடிகர் விஜய். அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “மாநாடு குறித்து உங்களுடன் பேச, இது நான்காவது கடிதம். வாஞ்சையில் நனைந்த வார்த்தைகளில் ஒரு நன்றிக் கடிதம். அரசியலில், கடிதமுறை என்பது ஆகப்பெரும் ஆயுதம். பேரறிஞர் அண்ணா தந்த ஆயுதம். தமிழக மக்கள், நம் அனைவருக்கும் சொந்தமானது. அந்த உணர்வின் அடிப்படையில்தான் நாமும் அதைக் கையில் எடுத்தோம். இந்தக் கடிதம் எழுதும்போது, என்னென்னவோ எண்ண...

சரவெடி அறிவிப்பு…தீபாவளிக்கு லீவு மேல் லீவு கொடுக்கும் அரசு…
Post

சரவெடி அறிவிப்பு…தீபாவளிக்கு லீவு மேல் லீவு கொடுக்கும் அரசு…

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  நாடு முழுவதும் வரும் 31ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 31ம் தேதி வியாழக்கிழமை என்பதால், அதற்கு அடுத்த நாளான நவம்பர் 1ம் தேதியும் (வெள்ளிக்கிழமை) பொது விடுமுறை என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனால் வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என 4 நாட்கள் தொடர்...

உதயநிதி டி-சர்ட் வழக்கு – அரசுக்கு உத்தரவு
Post

உதயநிதி டி-சர்ட் வழக்கு – அரசுக்கு உத்தரவு

அரசு நிகழ்ச்சிகளில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், உதயசூரியன் சின்னம் பொறித்த  டி-ஷர்ட் அணிந்து வருவதற்கு எதிரான வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  சென்னை சேலையூரைச் சேர்ந்த வழக்கறிஞர் சத்தியகுமார் தாக்கல் செய்துள்ள இந்த மனுவில், அரசு நிகழ்ச்சிகளில் ஊழியர்கள் முறையான ஆடை அணிந்து வருவதை வலியுறுத்தும் வகையில் கடந்த 2019-ம் ஆண்டு அரசாணை பிறப்பித்துள்ளதாக சுட்டிக்காட்டி உள்ளார். ஃபார்மல் பேண்ட் ஷர்ட் அல்லது வேட்டி சட்டை அணிந்து வர வேண்டும் என...

விஜய் ஏன் அதிமுகவை விமர்சிக்கவில்லை? – இபிஎஸ் சொன்ன வித்தியாசமான பதில்
Post

விஜய் ஏன் அதிமுகவை விமர்சிக்கவில்லை? – இபிஎஸ் சொன்ன வித்தியாசமான பதில்

வரும் சட்டமன்றத் தேர்தலில் ஒத்த கொள்கைகளுடன் கூடிய கட்சிகளுடன் அதிமுக கூட்டணி அமைக்கும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.  தீபாவளி பண்டிகையையொட்டி நலிந்த தொழிலாளர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிதி உதவி வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக வெற்றிக்கழகத்தின் மாநில மாநாட்டில் நல்ல தலைவர்களின் பெயர்களை குறிப்பிட்டு விஜய் பேசியதற்கு களங்கம் கற்பிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.  த.வெ.க உடன் கூட்டணி குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில்...

× Free India Logo
Welcome! Free India