QR Scanner மூலம் மதுபாட்டிகள் விற்பனை… கணினிமயமாகும் டாஸ்மாக்!

Home TamilNadu QR Scanner மூலம் மதுபாட்டிகள் விற்பனை… கணினிமயமாகும் டாஸ்மாக்!
QR Scanner மூலம் மதுபாட்டிகள் விற்பனை… கணினிமயமாகும் டாஸ்மாக்!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூலம் மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது தரமான மதுபாட்டில்களை, நியாயமான விலைக்கு விற்பனை செய்ய டாஸ்மாக் கடைகளை நவீன மயமாக்கும் முயற்சிகளை டாஸ்மாக் நிர்வாகம் எடுத்து வருகிறது. மேலும் டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களுக்கு ரசீது வழங்குதல், மதுபாட்டில்களில் பார்கோட் அச்சிட்டு, அதன் மூலம் தொடர்ச்சியாக கண்காணிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

இந்த நிலையில், டாஸ்மாக் கடைகளின் செயல்பாடுகளை கணினிமயமாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக பில்லிங் முறை செயல்படுத்தப்பட்டு, டாஸ்மாக் கடைகளில் உள்ள விற்பனையாளர்கள் க்யூ ஆர் ஸ்கேனர் மூலம் ஒவ்வொரு பாட்டிலிலும் உள்ள கலால் வரியுடன் கூடிய லேபிள்களை ஸ்கேன் செய்து பில் ரசீதுகளை வாடிக்கையாளரிடம் வழங்கி வருகின்றார்கள்.

அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தம் 83 டாஸ்மாக் கடைகள் இயங்குகிறது. தற்போது மாவட்டத்தில் உள்ள வானிபாடி, லாலாப்பேட்டை, வன்னிவேடு, தாஜ்புரா, நந்தியாலம் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில் ஸ்கேன் செய்து வாடிக்கையாளர்களிடம் விற்பனை செய்தனர்.

அதில் மதுபாட்டில்களை ஸ்கேன் செய்தால் அந்த பாட்டில் எங்கே வாங்கப்பட்டது, எந்த தேதியில் வாங்கப்பட்டது,  இது எந்த பேட்ச்சை சேர்ந்தது என மதுபான ஆலையில் இருந்து எப்போது வெளியே கொண்டு வரப்பட்டது போன்ற பல்வேறு தகவல்கள் இதன் மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.