18 நாள் பஞ்சாயத்து ஓவர் : வெளிமாநிலங்களுக்கு மீண்டும் துவங்கிய தனியார் ஆம்னி பஸ் சேவை 

Home TamilNadu 18 நாள் பஞ்சாயத்து ஓவர் : வெளிமாநிலங்களுக்கு மீண்டும் துவங்கிய தனியார் ஆம்னி பஸ் சேவை 
18 நாள் பஞ்சாயத்து ஓவர் : வெளிமாநிலங்களுக்கு மீண்டும் துவங்கிய தனியார் ஆம்னி பஸ் சேவை 

நவம்பர்  7ம் தேதி கேரளா சென்ற தமிழக ஆம்னி பஸ்களுக்கு, அம்மாநில போக்குவரத்து துறை அதிகாரிகள், சாலை வரி உட்பட பல்வேறு காரணங்களைக் கூறி, 70 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர், தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு இயக்கப்பட்ட, 230க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ் சேவைகளை நிறுத்தினர்.

இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என போக்குவரத்து துறை அமைச்சருக்கு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இதை தொடர்ந்து அமைச்சர் சிவசங்கர், ஆம்னி பஸ் உரிமையாளர்களுடன் பேச்சு நடத்தினார். இதில், உடன்பாடு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து 18 நாட்களுக்கு பின், தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு நேற்று முதல் மீண்டும் ஆம்னி பஸ் சேவை துவங்கியது.

மீண்டும் ஆம்னி பேருந்து சேவை துவங்கியுள்ளதால் பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட தொடங்கியுள்ளனர். சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கும் ஆம்னி பேருந்து சேவை தொடக்கம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

Leave a Reply

Your email address will not be published.