தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்.23-ம் தேதி நடைபெறவுள்ளது. மே 4 ம் தேதி வாக்குபதிவுகள் எண்ணப்பட உள்ளன. சட்டமன்ற தேர்தல் பணிக்காக பள்ளிகள், கல்லூரிகளை தேர்தல் ஆணையம் பயன்படுத்தி கொள்வது வழக்கம். இதன் காரணமாக 1 முதல் 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கான தேர்வுகளை முன்கூட்டியே நடத்தி முடித்து, பள்ளிகளை தங்கள் வசம் ஒப்படைக்கும்படி தேர்தல் ஆணையம் பள்ளிக்கல்வித் துறையை வலியுறுத்தி உள்ளது.
தற்போது தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 2-ம் தேதியும், 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 11-ம் தேதியும் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அதேபோல், 1 முதல் 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கான முழு ஆண்டு மற்றும் இறுதி பருவத் தேர்வுகள் ஏப்.10 முதல் 24-ம் தேதி வரை நடத்தப்படும் என பள்ளிக்கல்வித் துறை ஏற்கெனவே அறிவித்து இருந்தது.
ஆனால் தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக பள்ளிக்களை தேர்தல் ஆணையம் கேட்கிறது. இதன் காரணமாக ஏப்ரல் முதல் வாரத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு முழு ஆண்டுத் தேர்வுகளை தொடங்கி ஏப்.17-க்குள் நடத்தி முடிக்க பள்ளிகல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
இதற்கான தேர்வுக்கால அட்டவணை தயாரிக்கப்பட்டு துறையின் செயலர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியாகும் என பள்ளிகல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.




Leave a Reply