விஜய் கடைசி படம் 'ஜனநாயகன்' : டிச 27 ஆடியோ லாஞ்ச்: ஜன 9-ம் தேதி படம் ரிலீஸ்

Home TamilNadu விஜய் கடைசி படம் 'ஜனநாயகன்' : டிச 27 ஆடியோ லாஞ்ச்: ஜன 9-ம் தேதி படம் ரிலீஸ்
விஜய் கடைசி படம் 'ஜனநாயகன்' : டிச 27 ஆடியோ லாஞ்ச்: ஜன 9-ம் தேதி படம் ரிலீஸ்
Spread the love

‘ஜனநாயகன்’ படத்துடைய இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்துவதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. விஜய்யின் கடைசிப்படம் என கூறப்படுவதால், இந்நிகழ்வில் விஜய் பேசப்போவதை கேட்பதற்கு ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருப்பில் உள்ளனர். இந்நிலையில் ‘ஜனநாயகன்’ ஆடியோ லான்சிற்காக படக்குழு செய்துள்ள ஏற்பாடுகள் குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகி ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.

தமிழில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்த நடிகர் விஜய் தற்போது த.வெ.க என்ற கட்சியை ஆரம்பித்து அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இவர் தான் அரசியலில் ஈடுபட்டு வருவதால் இனி படங்களில் நடிக்கமாட்டேன் என்று தெரிவித்திருந்தார். இதைக்கேட்ட திரைத்துறையினர், ரசிகர்கள் பலரும் நடித்துக் கொண்டே அரசியல் செய்யலாமே என்று கருத்து தெரிவித்தனர். இதனால் தான் ‘ஜனநாயகன்’ திரைப்படம் நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படமாக பார்க்கப்படுகிறது.

எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ ஆடியோ லான்ச் வரும் டிசம்பர் 27 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. எப்பவும் போல் சென்னையில் இல்லாமல் மலேசியாவில் இந்த நிகழ்ச்சி நடக்கவுள்ளது. இந்நிகழ்ச்சியில் விஜய் இதுவரை நடித்த 68 படங்களில் இடம்பெற்ற பிரபலமான பாடல்களை அந்தந்த பாடகர்களை வைத்து பாட வைத்து ஒரு இசை கச்சேரி நடத்தி, அதோடு ஆடியோ லான்ச்சை நடத்துவதற்கு படக்குழு திட்டமிட்டுள்ளது. இதனால் ரசிகர்களுக்கு டபிள் ட்ரீட் இருக்கும் என சொல்லப்படுகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக படம் வெளியாக உள்ளதால், அரசியல் நொடி பறக்கும் வசனங்கள், காட்சி இடம் பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. புத்தாண்டை முன்னிட்டு ‘ஜனநாயாகன்’ டிரெய்லர் ரிலீசாக வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. 

இப்படம் அடுத்த மாதம் 9 ஆம் தேதி பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.விஜய் அரசியல் கட்சி தொடங்கி இருப்பதால் ‘ஜனநாயகன்’  திரைப்படம் கடைசி படம் என்பதால் அவரது ரசிகர்கள் மட்டுமில்லாது, திரையுலகினரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். 


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

× Free India Logo
Welcome! Free India