மோசடி வழக்கு: நிதி நிறுவன இயக்குநர் சொத்து விவரங்கள் தாக்கல்

Home TamilNadu மோசடி வழக்கு: நிதி நிறுவன இயக்குநர் சொத்து விவரங்கள் தாக்கல்
மோசடி வழக்கு: நிதி நிறுவன இயக்குநர் சொத்து விவரங்கள் தாக்கல்
Spread the love

சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த நூற்றுக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக அந்நிதி நிறுவனத்தின் இயக்குநர் தேவநாதன் யாதவ் உள்பட 6 பேரை சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர். 

இந்த வழக்கில் ஜாமின் கோரி தேவநாதன் உள்பட 3 பேர் தாக்கல் செய்த மனுக்களை ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், தேவநாதன் யாதவ் மற்றும் குணசீலன் ஆகியோர் ஜாமின் கோரி இரண்டாவது முறையாக மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

கடந்த முறை விசாரணைக்கு வந்த போது பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புகார் அளித்துள்ளதாகவும், பாதிக்கப்பட்ட அனைவரும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்பட்டது. மேலும், தேவநாதன் யாதவ் அரசியல் பின்புலம் மற்றும் பண பலம் கொண்டவர் என்பதால் அவருக்கு ஜாமின் வழங்க கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் நீதிபதி, தேவநாதன் யாதவின் சொத்துக்களை ஏலம் விட்டு அதன் மூலம் வரும் பணத்தை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கலாமா? என்பது https://chaprana.com குறித்து ஆலோசித்த நிலையில் அவரின் சொத்துகள் குறித்த விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். 

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி சுந்தர் மோகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தேவநாதன் யாதவ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அவரின் சொத்து விவரங்களை தாக்கல் செய்தார். இதனையடுத்து,  காவல்துறை மற்றும் முதலீட்டாளர்கள் தங்கள் தரப்பு பதிலை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை ஏப்ரல் 9-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

× Free India Logo
Welcome! Free India