முடிந்தது சிகிச்சை- டாக்டர்களுக்கு நன்றி சொன்ன ரஜினி

Home TamilNadu முடிந்தது சிகிச்சை- டாக்டர்களுக்கு நன்றி சொன்ன ரஜினி
முடிந்தது சிகிச்சை- டாக்டர்களுக்கு நன்றி சொன்ன ரஜினி
Spread the love

நடிகர் ரஜினிகாந்துக்கு நேற்று மாலை ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வயிற்று வலி, சீரற்ற ரத்த  ஓட்டம் மற்றும் செரிமான பிரச்னை ஆகியவற்றால் அனுமதிக்கப்பட்டதாகவும் பரிசோதனைகள் அனைத்து மேற்கொள்ளப்பட்டு  சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும், விரைவில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த  நிலையில் நடிகர் ரஜினிகாந்துக்கு ரத்த நாளத்தில் அடைப்பு கண்டறியப்பட்ட நிலையில் ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும், ரத்த நாளத்தில் இருந்த அடைப்புகள் சரிசெய்யப்பட்டு ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் தொடர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாகவும், இன்று மாலை ஜெனரல் வார்டுக்கு மாற்றப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் நடிகர் ரஜினிகாந்த நன்றாக இருப்பதாகவும், நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெறும் நடிகர் ரஜினிகாந்த் இன்று கண்விழித்த பின்னர் தனக்கு சிகிச்சையளித்த டாக்டர்களுக்கு நன்றி தெரிவித்ததாகவும், கண்விழித்து நன்றாக பேசுவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

× Free India Logo
Welcome! Free India