அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், சென்னை தாம்பரம் அரசு சேவை இல்லத்திலேயே 8-ம் வகுப்பு மாணவிக்கு பாதுகாப்பு இல்லை என்பது இந்த திமுக அரசு முற்றிலும் செயலிழந்து நிற்பதையே உணர்த்துவதாகவும், முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இதற்கு வெட்கித் தலைகுனிய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
அரசு சேவை இல்லத்தில் உள்ள சிறுமிகளைக் காக்க வேண்டிய காவலாளியே இப்படி ஒரு கொடூர செயலில் ஈடுபட்டிருப்பது, குற்றம் செய்பவர்களுக்கு இந்த ஆட்சி எடுக்கும் நடவடிக்கைகள் மீது துளி கூட பயம் இல்லை என்ற குற்றச்சாட்டை மெய்ப்பிக்கும் வகையிலேயே உள்ளதாக கூறியுள்ளார்.
இந்த காவலாளியால் மற்ற சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப் பட்டுள்ளனரா? என்பதை காவல்துறையினர் தீர விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாடு டெல்லிக்கு Out Of Control-ஆக இருப்பதாக யாரோ எழுதிக் கொடுத்த டயலாக்கைப் பேசும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தங்கள் ஆட்சியில் Out Of Control ஆக இருக்கும் பாலியல் “SIR”-களை எப்போது Control செய்யப் போகிறீர்கள்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவிக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என்றும், மாணவி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவலாளி மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்
திமுக ஆட்சியில் அவுட் ஆப் கண்ட்ரோல் ஆக இருக்கும் பாலியல் “சார்”-களை எப்போது கண்ட்ரோல் செய்யப் போகிறீர்கள்? என எதிக்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.




Leave a Reply