தென்காசியில் தனியார் பேருந்துகள் மோதி விபத்து : 8 பேர் பலி 40 பேர் காயம்

Home TamilNadu தென்காசியில் தனியார் பேருந்துகள் மோதி விபத்து : 8 பேர் பலி 40 பேர் காயம்
தென்காசியில் தனியார் பேருந்துகள் மோதி விபத்து : 8 பேர் பலி 40 பேர் காயம்

தென்காசி நோக்கிச் சென்று கொண்டிருந்த இரண்டு தனியார் பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் 8 பேர் பலியானதாகவும், அவர்களில் 5 பெண்கள், 3 ஆண் என்பதும் தெரிய வந்துள்ளது.

மேலும், விபத்துக்குள்ளான பேருந்துகளில் சிக்கி, காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். தென்காசி அரசு மருத்துவமனையில் இதுவரை 40 பேர் அனுமதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிகிறது. 

திடீரென பேருந்து ஓட்டுநர்களின் கட்டுப்பாட்டை இழந்து ஒரு பேருந்தின் பின்புறம் மற்றொரு பேருந்து சென்று இடித்துள்ளது என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்தில், ஒரு பேருந்தின் முன்பகுதியும், மற்றொரு பேருந்தின் பின் பகுதியும் கடுமையாக சேதமடைந்திருக்கிறது. ஒரு பேருந்தின் பின் பக்க இருக்கைகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருப்பதன் மூலம், அதிலிருந்த பயணிகள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து காரணமாக தென்காசி முக்கிய சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்பதால் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.