டிட்வா புயல் எதிரொலி : 54 விமானங்கள் ரத்து- 300 பயணிகள் இலங்கையில் சிக்கி தவிப்பு

Home TamilNadu டிட்வா புயல் எதிரொலி : 54 விமானங்கள் ரத்து- 300 பயணிகள் இலங்கையில் சிக்கி தவிப்பு
டிட்வா புயல் எதிரொலி : 54 விமானங்கள் ரத்து- 300 பயணிகள் இலங்கையில் சிக்கி தவிப்பு

டிட்வா புயலால் ஏற்பட்டுள்ள மோசமான வானிலை காரணமாக சனிக்கிழை சென்னை விமானநிலையத்தில் இருந்து இயக்கப்படும் மற்றும் வருகை தரும் 54 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளனர்.சென்னையில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும் 12 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதேபோன்று சென்னைை, பெங்களூரு, மும்பையில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும் 11 சிறிய விமானங்களும், ஹைதராபாத்தில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும் 1 விமானங்கள் மற்றும் சென்னைக்கு வரும் விமானங்கள் என 54 விமானங்களின் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னையிலிருந்து தூத்துக்குடி, மதுரை, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் உள்நாட்டு விமானங்கள் மட்டுமின்றி பல வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதனால், பயணிகள் தங்களுக்கான விமான நிறுவன அலுவலகங்களை தொடா்புகொண்டு விமானத்தின் புறப்பாடு குறித்த தகவல்களை உறுதி செய்த பின்னா் பயணத்தை மேற்கொள்ள விமானநிலைய நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

300 பயணிகள் சிக்கி தவிப்பு

துபாயில் இருந்து இலங்கை வழியாக இந்தியா வந்த 150 தமிழர்கள்  300 பயணிகள் இலங்கை விமான நிலையத்தில் சிக்கி தவித்து வருகின்றனர். மோசமான வானிலை, தொடர் கனமழை காரணமாக விமான இயக்கப்படாத காரணத்தால் இந்தியா திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு முறையான உணவு கூட கிடைக்காமல் 300 பயணிகளும் கொழும்பு விமான நிலையத்தில் சிக்கி தவித்து வருகின்றனர். 

150 தமிழக பயணிகளை சென்னை அழைத்து வருவது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு தமிழக வெளிநாடு வாழ்வு தமிழர் நலத்துறை அமைச்சர் நாசர் கொண்டு சென்றுள்ளார். கொழும்பு விமான நிலையத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்டு கொண்டுஉரிய நடவடிக்கை மேற்கொள்ள என தமிழக அரசு உத்தரவாதம் அளித்துள்ளது. 

விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதால், சொந்த ஊர் செல்ல விமான நிலையம் வந்த பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். 

Leave a Reply

Your email address will not be published.