சீமானுக்கு எதிரான ஐபிஎஸ் வருண்குமார் வழக்கு ரத்து : சென்னை உயர்நீதிமன்றம் மதுரை அமர்வு உத்தரவு 

Home TamilNadu சீமானுக்கு எதிரான ஐபிஎஸ் வருண்குமார் வழக்கு ரத்து : சென்னை உயர்நீதிமன்றம் மதுரை அமர்வு உத்தரவு 
சீமானுக்கு எதிரான ஐபிஎஸ் வருண்குமார் வழக்கு ரத்து : சென்னை உயர்நீதிமன்றம் மதுரை அமர்வு உத்தரவு 

தமக்கு எதிராக ஆதாரம் இல்லாமல் அவதூறு கருத்துகளைத் தெரிவிக்கச் சீமானுக்குத் தடை விதிக்கக் கோரியும், ரூ.2.10 கோடி மான நஷ்ட ஈடு கோரியும் ஐ.பி.எஸ். அதிகாரி வருண்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவுக்கு சீமான் சார்பில் தற்போது பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சீமான் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், வருண்குமார் ஐ.பி.எஸ். அதிகாரியை நோக்கிப் பின்வரும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. வரதட்சணைக் கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுச் சிறை சென்றவர் வருண்குமார் என்று கடுமையாகச் சாடப்பட்டுள்ளது. ராமநாதபுரம் எஸ்.பி.யாக இருந்தபோது, ட்விட்டரில் தனது சொந்தக் கருத்துகளைப் பதிவிட்டதற்காகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டவர் வருண்குமார் என்றும், இதுவே அவரின் நடத்தைக்குச் சாட்சி என்றும் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீமானுக்கு எதிராக ஐபிஎஸ் அதிகாரி வருண் குமார் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு தொடர்பாக திருச்சி நீதி​மன்​றத்​தில் நாம் தமிழர் கட்​சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி ஆஜரா​னார். இந்த நிலையில், சீமான் மீதான அவதூறு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் மதுரை அமர்வு  ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.