"குப்பை கொட்டாதே" என்று தாக்குதல்.. வாகன ஓட்டுநரை தாக்கிய 3 பேர் கைது!

Home TamilNadu "குப்பை கொட்டாதே" என்று தாக்குதல்.. வாகன ஓட்டுநரை தாக்கிய 3 பேர் கைது!
"குப்பை கொட்டாதே" என்று தாக்குதல்.. வாகன ஓட்டுநரை தாக்கிய 3 பேர் கைது!
Spread the love

சென்னை தாம்பரம் அடுத்த கன்னடபாளையம் குப்பை கிடங்கில் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு மண்டலங்களில் இருந்து குப்பைகள் சேகரிக்கபட்டு கொட்டபட்டு வருகிறது.

குப்பைகள் கொட்டப்படுவதால் சுகாதார சீர் கேடு மட்டுமின்றி நோய்கள் பரவி வருவதாக அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று மண்டலம் இரண்டில் இருந்து குப்பைகளை ஏற்றி வந்த வாகனத்தை வழிமறித்த திமுக  52 வது வட்ட செயலாளர் விஜயன் மற்றும் சக நண்பர்கள் நான்கு பேர் குப்பைகளை கொட்ட கூடாது என்று குப்பை வாகனத்தை ஓட்டி வந்த காசராஜு என்பவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த வட்ட செயலாளர் மற்றும் அவரது நண்பர்கள் காசராஜூவை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி சென்றுள்ளன்ர்.

இதனை கண்ட சக ஊழியர்கள் பலத்த காயமடைந்த காசராஜாவை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கபட்டு மேல் சிகிச்சைக்காக ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் குறித்து தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கபட்டதை அடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் அதே பகுதியை சேர்ந்த தனசேகர் மற்றும் தங்கம் ஆகிய இருவரை கைது செய்த போலீசார் தலைமறைவாக உள்ள வட்ட செயலாளர் விஜயன் உட்பட மூன்று பேரை தேடி வருகின்றனர்.


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

× Free India Logo
Welcome! Free India