உதயநிதி பிறந்தநாள் : குறிஞ்சி இல்லத்தில் பிரியாணி, ஆடல் பாடலுடன் உற்சாக கொண்டாட்டம்

Home TamilNadu உதயநிதி பிறந்தநாள் : குறிஞ்சி இல்லத்தில் பிரியாணி, ஆடல் பாடலுடன் உற்சாக கொண்டாட்டம்
உதயநிதி பிறந்தநாள் : குறிஞ்சி இல்லத்தில் பிரியாணி, ஆடல் பாடலுடன் உற்சாக கொண்டாட்டம்

தமிழ் நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 49-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

உதயநிதி தனது பிறந்தநாளையொட்டி இன்று காலை பெரியார், அண்ணா, கருணாநிதி சமாதிகளுக்கு நேரில் சென்று மரியாதை செலுத்தினார்.இதை தொடர்ந்து சிஐடி காலணியில் உள்ள கனிமொழி இல்லத்திற்கு சென்ற உதயநிதி, அவரிடம் ஆசி பெற்றதோடு, அங்கிருந்த கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

இதன் பின்னர் மதியம் நிர்வாகிகள் அடையாறு பசுமைவழி சாலையில் உள்ள உதயநிதியின் குறிஞ்சிஇல்லத்திற்கு படையெடுக்க தொடங்கினார். கரகாட்டம், ஓலியாட்டம் என ஆடல், பாடலுடன் அப்பகுதி முழுவதும் களைக்கட்டியது. பச்சை கலரில் புடவை அணிந்த வந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் பசுமை வழிசாலையில் நடனம் ஆடிய படி குறிஞ்சி இல்லத்தை நோக்கி சென்றனர். 

சென்னை மாநகராட்சி கவுன்சிலர் கே.கே.நகர் தனசேகரன் ஆயிரம் பேருடன் வருகை தந்து உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினார். அதுமட்டுமின்றி, பலாப்பழம், செவ்வாழை என பழங்களுடன் சீர்வரிசைகளும் உதயநிதிக்கு பிறந்தநாள் பரிசாக வழங்கப்பட்டது.

இப்படி பிறந்தநாள் கூற வந்த நிர்வாகிகளுக்கு பேக் செய்து வைக்கப்பட்டிருந்து பிரியாணி டப்பாக்கள் கொடுக்கப்பட்டது. உற்சாகம் களைப்புரண்டு ஓடியது. 

Leave a Reply

Your email address will not be published.