Spread the love நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் புத்தாடை உடுத்தி, இனிப்புகளை வழங்கி, பட்டாசு வெடித்து தீபாவளியை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தனது இல்லத்தில் பட்டாசு வெடித்து மக்களுக்கும் தூய்மை பணியாளர்களுக்கும் இனிப்புகள் வழங்கி தீபாவளி பண்டிகை கொண்டாடினார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “உலகம் முழுவதும் இருக்கும் தமிழக மக்கள், சகோதர சகோதரிகள் என அனைவருக்கும் எனது தீபாவளி வாழ்த்துகள். இந்த தீபாவளி இரட்டிப்பு...

”உங்கள் முடிவை உடனே கைவிட வேண்டும்…” – மாநகராட்சி அன்புமணி வேண்டுகோள்!
Spread the love இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையில் சைதாப்பேட்டை, வியாசர்பாடி , திரு.வி.க நகர் உள்ளிட்ட 9 இடங்களில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான செயற்கை புல்தரை கால்பந்து விளையாட்டுத் திடல்களை தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவை, பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட அமைப்புகளின் கடும் எதிர்ப்புக்குப் பிறகு மாநகராட்சி திரும்பப் பெற்றிருக்கிறது. பட்ட பிறகாவது சென்னை மாநகராட்சி அதன் முடிவை திரும்பப் பெற்றிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனாலும், மாநகராட்சியின் முடிவு முழுமையானதாக இல்லை. கால்பந்து திடல்கள் மட்டும் தனியாரிடம் ஒப்படைக்கப்படுவது தவிர்க்கப்பட்டால் மட்டும் போதாது....

”பெருந்திரளாக ஒன்றுக் கூடுவோம்..” – சீமான் அறிக்கை!
Spread the love இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஐம்பதாயிரம் ஆண்டுகள் பழமையான உலகின் முதல் மொழியான தமிழ்மொழியை தாய்மொழியாக கொண்ட தொல்குடியான நம் தமிழினத்தின் தாயக நிலப்பரப்பு, தமிழ்நாடு என்கிற வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பாக மட்டும் இல்லாமல், தமிழர்கள் என்ற தனித்த தேசிய இனம் நிலைத்து வாழும் நிலப்பகுதியாகவும் இருந்து வருகிறது. தனக்கென தனித்த இலக்கண செறிவுமிக்க இலக்கியம், தொன்றுதொட்ட வரலாறு, கலை, பண்பாடு என வாழ்வியல் விழுமியங்கள் அத்தனையும் கொண்டு தமிழர் என்கின்ற தேசிய இனம் வரலாற்றுத் தொடர்ச்சியோடு இந்த நிலப்பரப்பில் வாழ்ந்து மற்ற...

உச்சம் தொட்ட தங்கம் விலை.. இப்போ என்ன விலை தெரியுமா?
Spread the love தங்கம் விலை மீண்டும் ராக்கெட் வேகத்தில் ஏறத்தொடங்கியுள்ளது. இன்று தீபாவளி என்பதால், தங்கம் வாங்க நிறைய பேர் ஆர்வம் காட்டி வரும் நிலையில், சவரன் 60 ஆயிரம் ரூபாய்த்தை நெருங்கி நகைப்பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. கடந்த சில தினங்களாகவே தங்கம் விலை உச்சம் தொட்டு வருகிறது. சர்வதேச பொருளாதார நிலையற்ற தன்மை, பணவீக்கம், புவிசார் பதட்டங்கள் ஆகியவை தங்கம் விலை உயர்வுக்கு காரணம் என்று நிபுணர்கள் கூறு வருகின்றனர். இந்த நிலையில், இன்று தங்கம் விலை சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து,...

தமிழ்நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாட்டம்.. புத்தாடை உடுத்தி பட்டாசு வெடித்து மகிழ்ச்சி
Spread the love தீபாவளி பண்டிகை இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் காலை முதலே புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்து மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. தஞ்சையில் தீபாவளி பண்டிகை களைகட்டி உள்ளது. மக்கள் அதிகாலையில் குளித்து புத்தாடை உடுத்தி வீட்டின் வாசல் முன்பு பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். ஈரோடு வ.உ.சி பூங்கா மைதானத்தில் செயல்பட்டு வரும் நேதாஜி தினசரி காய்கறி சந்தை வியாபாரிகள் தீபாவளி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, 50க்கும் மேற்பட வியாபாரிகள்...

”தீபாவளி வாழ்த்து சொல்லமாட்டோம்னு இருந்தாங்க..ஆனா இப்போ…”
Spread the love தீபாவளிக்கு இது வரை வாய்திறக்காதவர்களும் இப்போது வாய் திறந்து வாழ்த்து சொல்லி இருக்கிறோர் இதுவே எங்களுக்கு வெற்றி தான் என தெரிவித்துள்ளார் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன். நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் புத்தாடை உடுத்தி, இனிப்புகளை வழங்கி, பட்டாசு வெடித்து தீபாவளியை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள இல்லத்தில் பட்டாசு வெடித்து மக்களுக்கும், தூய்மை பணியாளர்களுக்கும் இனிப்புகள் வழங்கி தீபாவளி பண்டிகை கொண்டாடினார் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்....

ரயில் தடம்புரண்டு விபத்து… சக்கரம் கழன்று தடம் புரண்டதாக தகவல்
Spread the love சென்னை சென்ட்ரலில் இருந்து போடி சென்ற ரயில் மதுரை அருகே திடீரென தடம் புரண்டது. தீபாவளிப் பண்டிகையை ஒட்டி சிறப்பு ரயில்கள் இயக்க கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், தெற்கு ரயில்வே 4 நாட்களுக்கு முன்பு சிறப்பு ரயில்களை அறிவித்தது. குறிப்பாக சென்னையில் இருந்து மதுரைக்கு சொந்த ஊர் செல்வோருக்காக சிறப்பு ரயில்கள் விடப்பட்டது. அக்டோபர் 29, 30, நவம்பர் 2ம் தேதிகளில் தாம்பரத்தில் இருந்து மதுரைக்கும், மதுரையில் இருந்து தாம்பரத்திற்கும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அதனடிப்படையில் சென்னை சென்ட்ரலில் இருந்து போடி...

விஜய்யின் தவெக மாநாடு குறித்து கருத்து தெரிவித்த நடிகர் ரஜினி
Spread the love தனக்கு வாழ்த்து சொல்ல வந்த ரசிகர்களை சந்தித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த். நடிகர் ரஜினியின் பிறந்த நாள் மற்றும் தீபாவளி, பொங்கல், ஜனவரி 1 ஆகிய முக்கிய பண்டிகை நாட்களில் அவரை சந்திப்பதற்காக ரசிகர்கள் ரஜினியின் வீட்டிற்கு வருவது வழக்கம் நடிகர் ரஜினியும் வெளியில் வந்து ரசிகர்களை சந்திப்பது வழக்கம், இன்று தீபாவளி பண்டிகையையொட்டி ரஜினிக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டின் முன்பு இன்று காலையிலேயே ஏராளமான ரசிகர்கள் திரண்டு உள்ளனர் அவரது...

தீபாவளி; மோசமடைந்த காற்றின் தரக் குறியீடு
Spread the love தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் காற்றின் தரக் குறியீடு மோசமடைந்துள்ளது. நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலை முதலே மக்கள் பட்டாசுகளை வெடிக்கத் தொடங்கி விட்டனர். இதனால், சென்னை மாநகரம் காலையிலேயே புகைமூட்டமாக மாறியது. சென்னையில் தொடர்ந்து இன்று காற்று மாசு அதிகரித்த வண்ணம் உள்ளது. சென்னையில் 3 இடங்களில் காற்றின் தரக்குறியீடு மோசமடைந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 204 என்ற அளவில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது. இதேபோல், செங்கல்பட்டு மாவட்டத்தில் 154, கடலூரில்...

தீபாவளி பண்டிகை – தலைவர்கள் வாழ்த்து
Spread the love தீபாவளி பண்டிகையையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசு தலைவர், பிரதமர் மோடி, தமிழ்நாடு ஆளுநர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தீபாவளி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தீபாவளி என்பது மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தின் பண்டிகை. அறியாமைக்கு எதிராக அறிவும், தீமைக்கு எதிராக நன்மையும் வெற்றி பெற்றதைக் குறிக்கும் விழாவாகும் என குறிப்பிட்டுள்ளார். தீபாவளி பண்டிகை பிரகாசமான எதிர்காலத்துக்கான நம்பிக்கையையும் தூண்டுவதாகவும், மாசு இல்லாத தீபாவளியைக்...

