Spread the love சென்னை மெரினாவில் காவல்துறையிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட சந்திர மோகன் மற்றும் தனலட்சுமி ஆகியோரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மெரினா லூப் சாலையில் நின்று கொண்டிருந்த நான்கு சக்கர வாகனத்தை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் எடுக்குமாறு கூறியபோது, சந்திர மோகனும் அவரது தோழி தனலெட்சுமியும் காவல் துறையினரை ஆபாசமாக திட்டினர். இதையடுத்து, மயிலாப்பூர் காவல்துறையினர் அளித்த புகாரின் அடிப்படையில், சந்திரமோகன் மற்றும் அவரது தோழி தனலட்சுமி ஆபாசமாக திட்டுதல்,...

விஜய் நாளை அவசர ஆலோசனை -சுற்றுப்பயணம் குறித்து முடிவு?
Spread the love தவெக தலைவர் விஜய் கட்சி நிர்வாகிகளுடன் நாளை அவசர ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் அக்.27ம் தேதி மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான தவெக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் விஜய்யின் பேச்சு தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மாநாட்டை தொடர்ந்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 2026 சட்டமன்ற தேர்தலை...

பிசாசு 2 திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை – நீதிமன்றம் உத்தரவு
Spread the love பிசாசு 2 திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிளையிங் ஹார்ஸ் பிச்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட இரண்டாம் குத்து திரைப்படத்தின் விநியோக உரிமையை பெற்ற ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் நிறுவனம் ஒப்பந்தப்படி, 4 கோடியே 85 லட்சம் ரூபாயில் இரண்டு கோடி ரூபாய் பாக்கி வைத்திருந்தது. இந்தத் தொகையை திருப்பிக் கொடுக்காமல் குருதி ஆட்டம், மன்மத லீலை ஆகிய படங்களை ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்தது.இந்த படங்களுக்கு தடை விதிக்க கோரிய வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம்,...

”3% உள் இட ஒதுக்கீடு அநீதிக்கு முடிவு கட்டுவோம்..” – கிருஷ்ணசாமி சூளுரை!
Spread the love இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அருந்ததியர் 3% உள் இட ஒதுக்கீடு ஆணையால் தென் தமிழகத்தில் பெரும்பான்மையாக உள்ள தேவேந்திர குல வேளாளர்களும், வடக்கு மாவட்டத்தில் பெரும்பான்மையான சமூகமான ஆதிதிராவிடர்களும் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் பெரும் பாதிப்பிற்கு ஆளாகிறார்கள்! இட ஒதுக்கீடுகளை யாருக்கும் யாரும் விருப்பப்படி அள்ளித் தந்து விட முடியாது! அதற்கான அழுத்தம் திருத்தமான காரணங்களும், ஆதாரங்களும் மிக மிக அவசியம். கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் மிகவும் பின்தங்கிய மக்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் இந்திய அரசியல் சாசனத்திலேயே உறுதி...

என்.எல்.சி Vs ஒப்பந்த தொழிலாளர்கள்… உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Spread the love பணி நிரந்தரம் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதை எதிர்த்து என்.எல்.சி நிறுவனத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், “இந்த விவகாரம் தொடர்பாக, மத்திய தொழிற் தீர்ப்பாயத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும்” என உத்தரவிட்டது. மேலும், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள என்.எல்.சி. நிர்வாகம் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் இடையேயான பிரச்னைக்கு தீர்வு காணும்...

எலக்ட்ரிக் கடைக்காரருக்கு ஷாக் கொடுத்த ஜிஎஸ்டி பில் – ரூ.22 கோடி கேட்டு நோட்டீஸ்
Spread the love சாதாரண எலக்ட்ரிக் கடைக்காரருக்கு ரூ. 22 கோடியே 29 லட்சம் ஜிஎஸ்டி நிலுவை தொகை கட்ட சொல்லி நோட்டீஸ் அனுப்பியதால் காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளார். செவ்வாப்பேட்டையை சேர்ந்த மகேந்திரகுமார் (30)என்ற வாலிபர் தனது பெயரில் போலி ஜிஎஸ்டி கணக்கு உருவாக்கி மோசடி செய்துள்ளதாக ஆவடி காவல் ஆணையரகத்தில் மகேந்திரகுமார் புகார் அளித்துள்ளார். ஆவடி அருகே செவ்வாப்பேட்டையை சேர்ந்த மகேந்திரகுமாருக்கு சிந்தாரிபேட்டை ஜி.எஸ்.டி அலுவலகத்தில் இருந்து 22 கோடியே 29 லட்சம் 29ஆயிரத்து 772 ரூபாய் நிலுவை தொகை கட்ட வேண்டும்...

தமிழகத்தில் குரங்கம்மை பாதிப்பு இல்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
Spread the love தமிழகத்தில் குரங்கம்மை பாதிப்பு இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் மணி விழா நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ சென்னை, மதுரை, கோவை போன்ற பன்னாட்டு விமான நிலையங்களில் வெளி நாடுகளிலிருந்து வரும் நபர்களை பரிசோதனை செய்யும் நடைமுறை நடத்தப்பட்டு வருகிறது. அனைத்து விமான நிலையாங்களிலும் ஒரு தனிமை அறை அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில்...

சென்னையில் வீட்டு வேலைக்கு வந்த சிறுமிக்கு நேர்ந்த சோகம்?- போலீஸ் விசாரணை
Spread the love சென்னையில் வீட்டு வேலை பார்த்து வந்த சிறுமி அடித்து கொலையா? எனற கோணத்தில் வீட்டு உரிமையாளர் மற்றும் அவரது மனைவியை பிடித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளார். சென்னை அமைந்தக்கரை மேத்தா நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் முகமது நவாஷ்(35.இவர் சொந்தமாக பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகின்றார். மேலும் இவருக்கு திருமணமாகி மனைவி நிவேதிதா மற்றும் 6 வயது குழந்தை உள்ளனர்.இந்நிலையில் நவாஸ் வீட்டில் கடந்த ஓராண்டாக தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த 16...

ஆட்சி அதிகாரத்தில் பங்கு: ஒரே மேடையில் தோன்றும் திருமா-விஜய்-அரசியலில் புதிய பரபரப்பு
Spread the love சென்னையில் நடக்க உள்ள நிகழ்ச்சி ஒன்றில் திருமாவளவனும், விஜய்யும் கலந்து கொள்ள உள்ளதால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. தவெக தலைவர் விஜய் சமீபத்தில் விக்கிரவாண்டி வி.சாலையில் மிக பிரமாண்ட மாநாட்டை நடத்தினார். இதில் லட்சக்கணக்கான தவெக தொண்டர்கள் கலந்து கொண்டனர். இதில் கட்சியின் கொள்கை மற்றும் கொள்கைத் தலைவர்கள் யார் என்பது குறித்து விளக்கி பேசினார். மேலும் ஆளும் திமுக அரசை கடுமையாக சாடி பேசி இருந்தார். இந்த நிலையில், விஜய்யின் பேச்சுக்கு பல்வேறு தரப்பில் வரவேற்பும், எதிர்ப்பு தெரிவித்து...

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தை தாமதப்படுத்துவதா? – தமிழக அரசுக்கு ராமதாஸ் கேள்வி
Spread the love முதுநிலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தை திட்டமிட்டே தாமதப்படுத்துவதா? உடனடியாக போட்டித்தேர்வை நடத்த வேண்டும் என தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழ்நாட்டில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்காக நடத்தப்படும் போட்டித்தேர்வுகளுக்கான பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட இருப்பதாகவும் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே போட்டித்தேர்வுகள் நடத்தப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருக்கிறது. முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தை திட்டமிட்டே தாமதப்படுத்தும் நோக்கத்துடன் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் கடைசியாக கடந்த 2021-ஆம் ஆண்டுதான் முதுநிலை பட்டதாரி...

