Spread the love சென்னை கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மகாபலிபுரம் சாலை ஆகிய முக்கிய சாலைகளில் போக்குவரத்துக்கு இடயூறாகவும், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும் இருச்சக்கர வாகனங்களை அதிவேகமாக ஓட்டிச் சென்று அதன் மூலமாக சாலை விபத்துகளை ஏற்படுத்தி வருவதில் சில உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும் பல்வேறு குற்றச்சாட்டு எழுந்துள்ளன. இக்குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து தாம்பரம் மாநகரக் காவல் ஆணையாளர் அபின் தினேஷ் மொடாக் அவர்களின் உத்தரவின்பேரில் பள்ளிக்கரணை போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு ஆய்வாளர் நடராஜன் உள்ளிட்ட போலீசார் மற்றும் கேளம்பாக்கம் போக்குவரத்துப் பிரிவு போலீசார்...

கார் மோதி பெண் காவலர் காலில் எலும்பு முறிவு
Spread the love வேலூர் மாவட்டம் கூத்தாண்டவர் கோயில் தெருவைச் சேர்ந்த பெண் காவலர் லோகேஸ்வரி (23) இவர் தற்போது கோயம்பேடு போக்குவரத்துப் பிரிவில் காவலராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று காலை காவலர் லோகேஸ்வரி கோயம்பேடு 100 அடி சாலையில் உள்ள டென்ஸ் ஸ்கொயர் மால் பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது டீ அருந்துவதற்காக சென்ற காவலர் லோகேஸ்வரி கேம்ஸ் வில்லேஜ் சிக்னல் அருகே சாலையைக் கடக்க முயன்ற போது அந்த வழியாக வேகமாக வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த போலீஸ்...

இந்த முறை அப்படி ஆகாது- நம்பிக்கை கொடுத்த உதயநிதி ஸ்டாலின்
Spread the love இந்த முறை தமிழ்நாடு அரசும், தமிழ்நாட்டு மக்களும் மழையை வெற்றிகரமாக எதிர்கொள்வோம் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வரும் முதலமைச்சர் கோப்பை போட்டிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், ” முதலமைச்சர் கோப்பை போட்டிகளை இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்திருக்கிறேன். முதலமைச்சர் கோப்பைக்கு பரிசு தொகை மட்டும் ரூ.32 கோடி வழங்கப்படுகிறது. சென்ற ஆண்டு 5 லட்சம் வீரர்,...

கன மழை எச்சரிக்கை- மின்சாரத்துறை உத்தரவு
Spread the love சென்னை முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்ள மண்டல வாரியாக அதிகாரிகளை நியமனம் செய்து மின்சாரத்துறை உத்தரவிட்டுள்ளது. சென்னை உள்பட 4 மாவட்டங்களில் தொடர் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஆகியோர் ஆலோசனைக்கூட்டம் நடத்தினர். இதில் மாவட்ட வாரியாக கண்காணிப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் சென்னையில் மழைநீர் தேங்கும் இடங்களின் பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், மெட்ரோ பணிகள் நடைபெறும் இடங்களில் மழைநீர் தேங்கும் இடங்களில் மக்களை...

இவங்கள நம்பாதீங்க..அத்தியாவசிய பொருட்களை வாங்கி வச்சிக்கோங்க-இபிஎஸ் அட்வைஸ்
Spread the love கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளதையடுத்து திமுக அரசை நம்பாமல், பொதுமக்கள் குடிநீர், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை முன்னெச்சரிக்கையுடன் வாங்கி வைத்துக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன் என இபிஎஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையின்படி, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், மழையினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் எந்தவிதமான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபடாமல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திமுக...

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் சிவசங்கர்
Spread the love பெரம்பலூரில் புதிய பேருந்து நிலையத்தை 4 கோடியே 73 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாடு செய்யும் பணிகளை தொடங்கி வைத்த போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அதன் பிறகு பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். கடந்த தீபாவளிப் பண்டிகையின் போது தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர்களை அழைத்துப் பேசி கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என அறிவுறுத்தியதைத் தொடர்ந்து கடந்த தீபாவளி பண்டிகையின்போது புகார்கள் எழவில்லை எனவும் ஆனால் ஆயுத பூஜையின் போது தனியார் ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்துள்ளதாகவும் இது...

கனமழை: அரசு இதெல்லாம் ஏற்பாடு செய்திருக்கு..தலைமைச் செயலாளர்
Spread the love சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமைச்செயலாளர் முருகானந்தம் தெரிவித்துள்ளார். சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தில் ஆய்வு செய்த பின்னர் தலைமைச்செயலாளர் முருகானந்தம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு அதிகமாக உள்ளது.வானிலை ஆய்வாளர்கள் நாளையிலிருந்து அதிக மழை இருக்கும் என்று தெரிவித்துள்ளனர். வட கடலோர மாவட்டங்கள் அதிக கனமழை இருக்கும்...

சாம்சங் தொழிலாளர்கள் தொடர்ந்த வழக்கு..நீதிமன்றம் கொடுத்த உத்தரவாதம்
Spread the love சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை பதிவு செய்யக் கோரிய வழக்கை உடனடியாக விசாரிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொழிற்சங்கத்தினர் முறையீடு செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வரும் சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள், சிஐடியு தொழிற்சங்க இணைப்பு பெற்ற சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் என்ற பெயரில், தொழிற்சங்கத்தை துவங்கி, அதை பதிவு செய்யக் கோரி தொழிற்சங்கங்கள் பதிவாளருக்கும், தொழிலாளர் நலத்துறை துணை ஆணையருக்கும் விண்ணப்பித்துள்ளனர். இந்த விண்ணப்பத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு...

கனமழை முன்னெச்சரிக்கை: நெல்லையில் இருந்து சென்னை விரையும் பேரிடர் மீட்பு படை..
Spread the love கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெல்லையில் நிலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 6 பேரிடம் மீட்பு குழுக்கள் சென்னை விரைகின்றன. சென்னையில் ஏற்கனவே 3 குழுக்கள் உள்ள நிலையில் மேலும் 6 குழுக்கள் சென்னை விரைகின்றன. இதைத் தவிர்த்து திருச்சியில் 3 குழுக்கள், கோவையில் 3 குழுக்கள், மேட்டுபாளையத்தில் 3 குழுக்கள் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையில் 18 குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. ஒரு குழுவிற்கு 25 வீரர்கள் விதம் 450 வீரர்கள் அனைத்து உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.மேலும், சென்னை மாநகரில் பருவமழையை...

10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணையை வெளியீடு.. விவரம் இதோ!
Spread the love 2024 – 2025ம் ஆண்டிற்கான 10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணையை வெளியிட்டார் அமைச்சர் அன்பில் மகேஸ். 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு. 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 7ஆம் தேதி முதல் 14ம் தேதி வரை நடைபெறும். 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 15ஆம் தேதி முதல் – 21 வரை நடைபெறும். 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 3ஆம் தேதி தொடக்கம். 10ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல்...

