Spread the love மூதாட்டியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த புகாரில் மதுரை துணை மேயர் மற்றும் அவரது சகோதரர் உள்ளிட்ட 5 பேர் மீது ஆறு பிரிவுகளின் கீழ் ஜெய்ஹிந்த்புரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மதுரை மாநகர் ஜெய்ஹிந்த்புரம் 2வது மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த வசந்தா. இவருக்கு ஒரு ஆண் மற்றும் 5 பெண் பிள்ளைகள் என ஆறு பிள்ளைகளுடன் இருந்து வருகிறார். இவரது மகன் முருகானந்தம் அதே பகுதியில் வீட்டின் அருகிலயே சலூன் கடை வைத்து நடத்தி வருகிறார்.இந்நிலையில் வசந்தா கடந்த...

ரூ.10 கோடியில் மாறப்போகும் அய்யப்பன் தாங்கல் பஸ் ஸ்டாண்ட்- திடீர் விசிட் அடித்த அமைச்சர்கள்
Spread the love ரூ.10 கோடி மதிப்பீட்டில் அய்யப்பன்தாங்கல் பேருந்து நிலையம் அமைப்பது குறித்து அமைச்சர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். சென்னையின் முக்கிய நுழைவாயிலாக இருந்து வருவது அய்யப்பன்தாங்கல். இந்த பகுதியில் அரசு போக்குவரத்து பணிமனை செயல்பட்டு வரும் நிலையில், தினம்தோறும் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இங்கு போதிய வசதிகள் இல்லாத காரணத்தால் சி.எம்.டி.ஏ. நிதியின் கீழ் ரூ.10 கோடி மதிப்பீட்டில் 12 பேருந்துகள் நிறுத்தும் அளவிற்கு பெரிய அளவிற்கு பேருந்து நிலையம் அமைப்பது குறித்து இந்து...

நீதிமன்ற உத்தரவை மதிப்பதில்லை- சென்னை மாநகராட்சி செயலுக்கு வலுக்கும் எதிர்ப்பு
Spread the love உயர்நீதிமன்ற உத்தரவை மீறி மனிதர்களை சாக்கடை நிறைந்த கால்வாயில் இறக்கி, எந்தவித பாதுகாப்பு உபகரணமும் இன்றி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தி வரும் சென்னை மாநகராட்சி அதிகாரிகளின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் கால்வாய்களை சுத்தம் செய்யும் பணியில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னை மாநகராட்சி 15-வது மண்டலத்துக்குட்பட்ட சோழிங்கநல்லூர் – மேடவாக்கம் செல்லும் செம்மொழி பிரதான சாலையில் உள்ள தனியார் கல்லூரி எதிரே கால்வாயில் சுத்தம் செய்யும் பணி...

‘ரஜினிகாந்த் நலம் பெற வேண்டும்’- மனமுருகி வேண்டிய மகள் செளந்தர்யா
Spread the love சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு கடந்த 10 நாட்களுக்கு மேலாக உடல்நல பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவருக்கு சிறுநீர் கழிப்பதில் பிரச்னை இருந்து வந்ததாகவும், ரத்த நாளத்தில் வீக்கம் ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இதைத்தொடர்ந்து மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அறுவை சிகிச்சை இன்றி ரத்த நாளத்தில் ஸ்டென்ட் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, மருத்துவக்குழுவின் தீவிர மருத்துவ கண்காணிப்பில் ரஜினிகாந்த் உள்ளார். மேலும்...

மதுவிலக்கு மாநாடு இதுக்குதான்.. நோக்கத்தை சிதைத்து விட்டார்கள் -திருமாவளவன் ஆதங்கம்
Spread the love விசிகவின் மதுவிலக்கு மாநாட்டின் உயர்ந்த நோக்கத்தை சிதைத்து விட்டார்கள் என திருமாவளவன் ஆதங்கம் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சியில் விசிக சார்பில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் நடந்த மதுவிலக்கு மகளிர் மாநாட்டில் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டுவர வேண்டும், தேசிய மது விலக்கு கொள்கையை அமல்படுத்த வேண்டும் உள்பட 13 தீர்மானங்களை நிறைவேற்றப்பட்டது. இந்த மாநாட்டில் திமுக, காங்கிரஸ், தவாக, மமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் பேசிய திருமாவளவன் எம்.பி., “ விசிகவின் மது...

விசிக நடத்திய மது ஒழிப்பு மகளிர் மாநாட்டில் 13 தீர்மானங்கள் நிறைவேற்றம்
Spread the love விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தலைமையிலான மது ஒழிப்பு மகளிர் மாநாடு இன்று திண்டிவனத்தில் நடைபெற்றது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சிமட்டுமின்றி வேறு பல கட்சியினைச் சேர்ந்தோரும் இந்த மாநாட்டி பங்கு பெற்றனர். இந்த மாநாட்டில் மது ஒழிப்பு தொடர்பான 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றை தொல்.திருமாவளவன் வாசித்தார். நிறைவேற்றப்பட்ட 13 தீர்மானங்கள் 1) மதுவிலக்கை தேசிய கொள்கையாக அறிவிக்க வேண்டும். 2) மதுவிலக்கை அமல்படுத்தும் மாநில அரசுக்கு மத்திய அரசு சிறப்பு நிதி அளிக்க வேண்டும். 3) மதுவிலக்கினால் பாதிக்கப்படும்...

யாரும் உழைப்பதற்கு தயாராக இல்லை – கிராம சபை கூட்டத்தில் ஆதங்கப்பட்ட அமைச்சர்
Spread the love இப்பொழுது யாரும் உழைப்பதற்கு தயாராக இல்லை என கிராம சபை கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே மேலபட்டமங்களம் ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டார். பின்னர் பொதுமக்களிடையே பேசிய அவர், “இன்றைக்கு கிராமங்களில் அடிப்படை வசதிகள் நிரம்பி இருக்கிற ஒரே மாநிலம் தமிழ்நாடுதான் என்றார். ஒரு ஊராட்சியில் இருந்து 4 லட்சம் ரூபாய் மட்டும்தான் அரசாங்கத்திற்கு வரியாக செலுத்துகிறோம். ஆனால்...

ரூ.10 லட்சம் லஞ்சம் கேட்டு மிரட்டல் – திமுக கவுன்சிலர் மீது புகார்
Spread the love குடிநீர் மற்றும் கழிவுநீர் ஓப்பந்த பணிகளை மேற்கொண்டு வரும் ஒப்பந்ததாரிடம் ரூ.10 லட்சம் லஞ்சம் கேட்டு மிரட்டல் விடுத்த திமுக கவுன்சிலர் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலை விஜிபி அமுதா நகர் கூவம் நதிக்கரை ஓரம் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் சென்னை குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் கழிவுநீர் நிர்வாகம் சார்பாக கழிவுநீர் இணைப்புக் குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. 56 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் இந்த பணிகளை நாகராஜன் கன்ஸ்ட்ரக்ஷன் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த நாகராஜன் ஓப்பந்த அடிப்படையில் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த...

ஏடிஎம் கொள்ளை கும்பலை பிடித்தது தமிழக காவல்துறைக்கு பெருமை – டிஜிபி பாராட்டு
Spread the love கேரள மாநிலம், திருச்சூரில் கடந்த 27ம் தேதி மூன்று ஏடிஎம்களில் பணத்தை கொள்ளையடித்து, தமிழகம் நோக்கி வந்த ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த கொள்ளைக் கும்பலை நாமக்கல் மாவட்ட காவல்துறையினர் வெப்படை அருகே சுற்றி வளைத்து பிடித்தனர். இந்த சம்பவத்தில் கொள்ளை கும்பலைச் சேர்ந்த ஜுமாந்தின் என்பவர் சுட்டு கொல்லப்பட்டார். அசார் அலி என்ற மற்றொரு கொள்ளையன் பலத்த காயமடைந்தார். ஐந்து பேர் பிடிபட்டனர். கொள்ளையர்கள் தாக்கியதில் குமாரபாளையம் ஆய்வாளர் தவமணி, உதவியாளர் ரஞ்சித் குமார் ஆகியோர் படுகாயமடைந்து நாமக்கல் அரசு மருத்துவமனையில்...

தாய் இல்லாமல் நான் இல்லை… எம்.ஜி.ஆர் பாடல் பாடி அசத்திய மாஜி!
Spread the love கோயம்பேடு அருகே அதிமுக சார்பில் நடைபெற்ற முதியோர் தின விழாவில் முன்னாள் அமைச்சர் பா.பெஞ்சமின் கலந்துகொண்டு ஆயிரம் முதியோர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். சென்னை கோயம்பேடு அடுத்த நெற்குன்றத்தில் அம்மா அறக்கட்டளை சார்பாக முதியோர்கள் தினம் கொண்டாடப்பட்டது. நெற்குன்றம் 145 ஆவது வார்டு அதிமுக கவுன்சிலர் சத்தியநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் முன்னாள் அதிமுக அமைச்சர் பா.பெஞ்சமின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது முதியோர் தினத்தை முதியோர்களுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடிய அவர், ஆயிரம் முதியோர்களுக்கு நலத்திட்ட உதவிகளை...

